"செஞ்சுரி" கொடு.. "செல்பி" எடு.. கலக்கும் வைகோ.. மதிமுகவின் பலே பிளான்..!
சென்னை: வைகோ உடன் செல்பி எடுக்க வரும் மதிமுக தொண்டர்கள் 100 ரூபாய் தர வேண்டும் என்று மதிமுக தலைக்கழகம் அறிவித்திருப்பது குறித்து சமூக வலைதளங்கள் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நாடாளுமன்றத்தில் அண்மை காலமாக பேசிவரும் பேச்சுகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆக்ரோசமாக ஒவ்வொரு விவாதத்திலும் வைகோ பேசுவது வைரலாகி வருகிறது. வைகோ உணர்ச்சிபெருக்குடன் பேசி திணறடிக்கக்கூடியவர். மிகுந்த பேச்சாற்றல் கொண்டவர் வைகோ. தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். நீண்டகாலமாக எம்பி எம்எல்ஏ என எந்த பதவியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்காக போராடி வந்தார். இந்நிலையில் வைகோ அடிக்கடி மக்களை சந்தித்து பிரச்சனைகளில் கலந்து கொண்டு போராடுவார்.

100 ரூபாய் நிதி வழங்க வேண்டும்
அப்போது வைகோ உடன் செல்பி எடுக்க பலரும் விரும்புவார்கள். இந்நிலையில் மதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் செல்பி எடுக்க விரும்பும் மதிமுக தொண்டர்கள் குறைந்தபட்சம் ரூ.100 நிதி தர வேண்டும்.

காசு கொடுக்கலாம்
வைகோவுக்கு சால்வை அணிவிக்க விரும்பும் கட்சியினர் சால்வைக்கு பதிலாக நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் மதிமுக கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

அறிவிப்புக்கு விமர்சனம்
மதிமுக இயக்கத்திற்கு நிதி திரட்டும் இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். வைகோவிடம் இப்படி பல அரசியல் தலைவர்கள் கேட்டிருந்தால் அவர் தனது சொத்தையே எழுதி வைத்திருக்க வேண்டியதிருக்கும் என ஒருவர் கிண்டல் அடித்துளளார். இதேபோல் மற்றொருவர் உங்களோடு புகைப்படம் எடுக்க 100 அல்ல 1000 ரூபாய்யும் கொடுக்கலாம்! இது எதிர்காலத்தில் வரலாறு நினைவுகளாய் மலரும் என்று கூறியுள்ளார்.

வைகோவின் முயற்சி
இதனிடையே வைகோவின் நிதி திரட்டும் இந்த முயற்சி பெரியார் செய்த முயற்சியைப் போன்றது என்று கூறுகிறார்கள். தந்தை பெரியாரும் இப்படித்தான் நிதி வசூலிக்க சில விஷயங்களை செய்வார் என்கிறார்கள்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications