Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்குமூலமெல்லாம் வேஸ்ட்.. நிர்மலா தேவி கோர்ட்டில் வாயை திறந்தால் பலர் சிக்குவார்கள்?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: நிர்மலா தேவி நீதிமன்றத்தில் வாயை திறந்து உண்மையை சொன்னால் பல முக்கிய புள்ளிகள் சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக பேராசிரியர் நிர்மலா தேவியும், இவரது வாக்குமூலத்தின் படி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் முருகனும் கருப்பசாமியும்தான் மாணவிகளை கேட்டார்கள் என்றாலும் அவர்கள் யாருக்காக கேட்டார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்காக மட்டும் கேட்கவில்லை என்பது எனக்கு தெரியும்.

    ஸ்பெஷல் புரோகிராம்

    ஸ்பெஷல் புரோகிராம்

    என்னிடம் கருப்பசாமி நேரிலும் போனிலும் கல்லூரி பெண்களை சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள். அடுத்த வாரம் ஒரு ஸ்பெஷல் புரோகிராம் வருகிறது என்று கூறி வந்தார். முக்கிய நபர்களை சந்தோஷப்படுத்தினால் எல்லோரும் நன்றாக இருக்கலாம் என்று மதுரை பல்கலைக்கழக நிர்வாகிகளும் பேராசிரியர்களும் தொந்தரவு செய்தனர். இவர்களின் தொந்தரவு மற்றும் வாங்கிய கடனுக்காகவே மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசினேன்.

    [நிர்மலா தேவி கூறிய வாக்குமூலம் பொய்யானது - பேராசிரியர் முருகன் மறுப்பு]

    பட்டமளிப்பு விழா

    பட்டமளிப்பு விழா

    அதில் ஒரு ஆடியோ மட்டும் வெளியே வந்துவிட்டது. நான் வெறும் அம்புதான் என்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிவிட்டனர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் கருப்பசாமி ஸ்பெஷல் புரோகிராம் என்று கூறுவதை பார்த்தால் அது பட்டமளிப்பு விழாவாகத்தான் இருக்கும்.

    யாருக்காக அடகு வைக்க

    யாருக்காக அடகு வைக்க

    அந்த விழாவுக்கு பல்வேறு அதிகாரிகள் வந்திருப்பர். எனவே இந்த பெண்களை யாருக்காக கேட்டார்கள், எதை சாதிப்பதற்காக கேட்டார்கள், என்ன நோக்கம் என்பதெல்லாம் தெரியவில்லை. நிர்மலா தேவியுடன் எம்மாதிரியான பதவிகளை அடைவதற்காக இந்த பெண்களை அடகு வைத்த துணிந்தார்கள்?

    நீதிமன்றத்தில்

    நீதிமன்றத்தில்

    இந்த வாக்குமூலங்களை நெருக்கடி கொடுத்தும் வேறு முறையில் நிர்மலா தேவியிடம் இருந்து வாங்கியிருக்கலாம். யாரை காப்பாற்றுவதற்காக இந்த வாக்குமூலம் வாங்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. நீதிமன்றத்தில் தைரியமாக அவர் உண்மையை சொன்னால் பலர் சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+