அதிமுக 7, பாஜக 4 இடங்களில் வெல்லும்.. இது நடந்தால் திமுக கூட்டணிக்கு சிக்கல்! ராஜநாயகம் டீம் கணிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக மக்கள் ஆய்வு அமைப்பினர் இயக்குனர் ராஜநாயகம் டீம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் ட்விஸ்ட் உள்ளது. அதாவது தேர்தல் நேரத்தில் நடக்கும் சிறுமாற்றம் என்பது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை குறைக்கும். அதோடு அதிமுக 7 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெல்லும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி உள்ளது.

கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி தேனி தவிர 38 தொகுதிகளில் வென்று அசத்தியது. தேனியில் ஓ பன்னீர் செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் மட்டும் வென்றார். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
37 + 1 + 1.. தமிழகத்தில் திமுக கூட்டணி ‛டாப்’.. அப்போ அதிமுக + பாஜக? வெளியான ராஜநாயகம் டீம் சர்வே
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணி கடந்த தேர்தலை போல் வெற்றி பெற்று தொகுதிகளை தக்க வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெல்ல அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு எம்பிக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்குவதால் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், கேரளாவில் பாஜக என்ட்ரி! 5 தென்மாநிலங்களில் வெல்வது யார்? லோக்சபா தேர்தல் Times now சர்வே
இதற்கிடையே தான் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழக லோக்சபா தேர்தல் தொடர்பாக மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பு கருத்துகள் கேட்கப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி வெல்லும். ஒரு இடத்தில் அதிமுகவும், இன்னொரு இடத்தில் பாஜகவும் ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டு இருந்தாலும் கூட சிக்கல் ஒன்று உள்ளது.
அதாவது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள 37 தொகுதிகளில் 9 இடங்களில் வெற்றி வாக்கு சதவீதம் என்பது வெறும் 4 சதவீதத்துக்கும் குறைவாக தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் தேர்தல் பிரசாரம் முடியவில்லை என்பதால் கடைசி நேரத்தில் களநிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
ஒருவேளை தேர்தல் சமயத்தில் பொதுமக்கள் அந்த தொகுதிகளில் அதிமுக, பாஜக கூட்டணியை நோக்கி சென்றால் இந்த இருகட்சிகளும் தமிழகத்தில் கூடுதல் இடங்களை பிடிக்கும். மாறாக திமுக கூட்டணியின் வெற்றி தொகுதி எண்ணிக்கை சரியும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 28 தொகுதிகளில் மட்டுமே வெல்லும். மாறாக அதிமுக 7 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும் வாகை சூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications