ஐயோ! ஜூலை 1 முதல் "இவர்களுடைய" ஆதார் எண்கள் செயலழிக்கலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்!
சென்னை: ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்கப்பட வேண்டும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
12 இலக்கங்களை கொண்ட புகைப்படத்துடன் கூடிய ஆதார் எண்ணை தற்போது அடையாளாமாக காட்டி வருகிறார்கள். அது போல் வருமான வரித் துறை சார்பில் பான் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் தனிப்பட்ட நபரின் வரவு செலவு கணக்குகள் வருமான வரித் துறைக்கு தெரிந்துவிடும்.

தற்போது பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வருமான வரித் துறை அறிவித்திருந்தது. எனினும் பெரும்பாலானோர் ஆதாரையும் பான் எண்ணையும் இணைக்காததால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்காவிட்டால் கார்டு செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் எப்படியெல்லாம் இணைக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றால் ஆதார் எண் தேவைப்படுகிறது.
ஆதார் எண் கிடைக்காதவர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் கார்டு விண்ணப்ப படிவத்தில் உள்ள என்ரோல்மென்ட் ஐடியை கொடுக்கலாம். e filing போர்ட்டலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் வருமான வரித் துறையின் e filing போர்ட்டலில் லாகின் செய்து லாகின் ஐடி, பாஸ்வேர்ட், பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.

இந்த விவரங்களை என்டர் செய்த பிறகு இப்போது நீங்கள் ஒரு கோடையும் டைப் செய்ய வேண்டும். இதன் பிறகு போர்ட்டலில் லாகின் செய்த பின்னர் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க சொல்லி ஒரு பாப் அப் விண்டோ தெரியும். இல்லாவிட்டால் profile settings சென்று அதில் லிங்க் ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களை உள்ளிடுங்கள். இது போன்ற விவரங்களை நீங்கள் ஏற்கெனவே வருமான வரித் துறையின் e filing போர்ட்டலில் பதிவிட்ட போதே கொடுத்திருப்பீர்கள். இப்போது திரையில் காட்டப்படும் விவரங்களும் உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் ஒன்றா என சரி பார்க்கவும். இரண்டும் ஒன்று என்றால் லிங்க் நவ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications