கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் தான்.. தில் இருந்தா வழக்கு போடு.. எடப்பாடிக்கு சவால் விட்ட புகழேந்தி!
சென்னை: "கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் தான். துணிச்சல் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்." என எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.
கோடநாடு வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் சிக்கி பலியானார். இந்த மரணம் இன்றும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜின் சகோதரர் தனபால், "எனது தம்பி கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார். கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன்.

என்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். கனகராஜ் இறந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அண்மையில் பிரஸ் மீட்டில் இதுகுறித்த கேள்வியால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, "கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் யாரோ ஒருவர் ரோட்டில் போகிறவர் எல்லாம் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுவது தவறு. ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் தனபால். அவர் மூன்று மாதம் சிறையில் இருந்தவர். நில அபகரிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். அவர் கூறுவதை எல்லாம் ஊடகங்கள் வெளியிடுவது தவறு.
கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலா அவர்களின் டிரைவராக மட்டுமே பணியாற்றியவர். ஒரு நாள் கூட ஜெயலலிதாவுக்கு கனகராஜ் கார் ஓட்டவில்லை. எனவே இனி ஊடகங்கள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என கூறினால் நான் வழக்கு தொடர்வேன்." என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும், கொள்கை பரப்புச் செயலாளருமான பெங்களூர் புகழேந்தி, கனகராஜ், ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை என்று சொல்கிறார். அப்படி சொன்னால் கேஸ் போடுவேன் என்கிறார்.
குற்றப் பத்திரிக்கையிலேயே கனகராஜ் ஜெயலலிதாவின் மாற்று ஓட்டுநர் என இருக்கிறது. குற்றப்பத்திரிக்கையில் அப்படி பதிவு செய்யப்பட்ட போதே அவர் ஜெயலலிதாவின் டிரைவர் இல்லை என சொல்லியிருக்கலாமே? கனகராஜ் கார்டனிலேயே தான் இருந்தார். அவர் ஜெயலலிதாவின் டிரைவர் தான். துணிச்சல் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்." என சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications