ரூ.1000 உரிமை தொகைக்கு இடையே.. பெண்களுக்கு அசத்தலான குட் நியூஸ் சொன்ன அரசு.. வேற லெவல் யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் இன்று வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் இன்றில் இருந்து வழங்கப்படுகின்றன.

 If you dont have a bank account, The government will open a bank account for you in 1000 RS Housewives Scheme

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்?:

  • குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்
  • ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
  • 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
  • ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
  • குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
  • திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்
  • ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:

  • குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
  • மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
  • ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
  • சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
  • ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
  • ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்

வங்கி கணக்கு: பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட வங்கி கணக்கு அவசியம்.

ஆனால் பல லட்சம் பேரிடம் தனியாக வங்கி கணக்கு இல்லை. இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசு அதிரடியான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி பெண் ஒருவர் டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுடன் முகாமிற்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் வங்கி கணக்கு இல்லை என்றால் முகாமிலேயே அதற்காக ஏற்பாடு செய்யப்படும்.

இதற்கு நீங்கள் உங்களுடன் இரண்டு போட்டோக்களை எடுத்து செல்ல வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை எடுத்து செல்ல வேண்டும். அங்கேயே உங்களுக்கு வங்கி கணக்கு திறக்கப்படும். பின்னர் அதன் பாஸ்புக் ஆகியவை உங்கள் விலாசத்திற்கு போஸ்ட் மூலம் அனுப்பப்படும். அந்த வங்கி கணக்கில் உங்கள் மாத தொகை வழங்கப்படும். இதனால் உங்களிடம் வங்கி கணக்கு இல்லை என்றால் வங்கி கணக்கு தொடங்குவதற்காக நீங்கள் பேங்க்கிற்கு அலைய வேண்டியது இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+