உங்கள் வீட்டில் நூலகம் இருக்கா? தமிழக அரசு வழங்கும் ரூ 3000! எப்படி பெறுவது தெரியுமா?
சென்னை: உங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறதா? அப்படியென்றால் தமிழக அரசு வழங்கும் ரூ 3000 உங்களுக்குத்தான். இதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அறிவு பசிக்கு தீனி போடுவதுதான் நூலகங்கள். ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகம் இருக்க வேண்டும் என்பதுதான் சான்றோர்களின் அறிவுறுத்தல் ஆகும்.
இது குறித்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது வீட்டில் உள்ள நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன. எந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் விவரம் என்பன உள்ளிட்ட விவரங்களுடன், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கும், மாவட்ட நூலக அலுவலக முகவரிக்கும் விண்ணப்பக்கலாம் என மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக ரூ 50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த துறை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கியமாக 200 பயனாளிகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவை கடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக்கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரிய நிலையில், தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தை 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த மானியத்தை பெற ஒருவர், ஒரு முறை மட்டுமே தகுதியுடையவர் ஆவார். கைம்பெண்கள், நலிவுற்றவர், ஆதரவற்றவர் உள்ளிட்டோருக்கு மட்டுமே கிடைக்கும். இந்த மானியத்தை பெற பிறப்பு சான்று, வருவாய் சான்று , குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று உள்ளிட்டவை தேவைப்படும்.












Click it and Unblock the Notifications