பான் கார்டு 2 வெச்சிருக்கீங்களா? அப்படின்னா 10,000 ரூபாய் காலி + தண்டனை.. உடனே இதை செய்துடுங்க.. ஈஸி
சென்னை: தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஒன்றுக்கு மேற்பட்ட பான்கார்டுகள் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும்.. அப்படி பான் கார்டுகள் இருந்தால், அதை உடனே ஒப்படைத்துவிட வேண்டும்.
ஆதார் கார்டுடன், பான் நம்பரை இணைப்பதற்கான கடைசித்தேதி ஜூன் 30, 2023 என்று அறிவிக்கப்பட்டிருந்தது... இந்த தேதிக்குள் உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், ஜூலை 1, 2023 முதல் உங்கள் பான் செயலிழந்திருக்கும்.
அப்படி செயலிழந்துவிட்டால், உங்கள் பான் கார்டை பயன்படுத்த முடியாது.. அதாவது, பணம் அனுப்புவது முதல், வங்கியில் லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை இப்படி எல்லாம் கடினமாகிவிடும். ஆனாலும், அபராதம் செலுத்தி, பான் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.

ரூ.1,000 கட்டணம் செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் ஆதார் நம்பரை தந்தபிறகு, 30 நாட்களில் மறுபடியும் உங்கள் பான் நம்பரை செயல்படுத்த முடியும்.
அபராதம்: ஒவ்வொருவருக்கும் இந்த பான்கார்டு மிகவும் அவசியம்.. ஆனால், யாராக இருந்தாலும் ஒரே ஒரு பான்கார்டுதான் நாம் வைத்திருக்க அனுமதி உண்டு.. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்க நமக்கு அனுமதி கிடையாது.. ஒருவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பிடிபட்டால், வருமான வரித்துறை உங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்துவிடும்.. அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதித்துவிடும்.
ஒருவரே 2 பான் கார்டுகளை வைத்திருக்க சில காரணங்கள் இருக்கலாம். ஒருவர், பான் கார்டு அப்ளை செய்திருக்கிறார் என்று வைத்து கொள்வோம். ஆனால், அது சரியான நேரத்துக்கு வராமல் போய்விடும்.. எனவே, சம்பந்தப்பட்டவர் இன்னொரு பான் கார்டு அப்ளை செய்யக்கூடஅப்போது, ஏற்கனவே விண்ணப்பித்ததுடன் சேர்த்து 2 பான் கார்டுகள் வந்துவிடும்.
2 கார்டுகள்: சிலர், திருமணத்திற்குப் பிறகு, குறிப்பாக, பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் பிறகு அது அவர்களின் பான் எண்ணிலும் மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றாமல் புதிய பான் எண்ணுக்கு விண்ணப்பித்தால் அந்த பெண்ணுக்கு 2 பான் கார்டுகள் இருப்பதாகிவிடும்..
இப்படி தெரியாமல் 2 கார்டுகளை சிலர் வைத்திருக்க நேரிடுகிறது.. ஒவ்வொருவரும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்துள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மோசடிக்காக பல பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். எப்படி இருந்தாலும், ஒரே ஒரு பான்கார்டு வைத்திருக்க மட்டுமே உண்டு.
சரி, ஒன்றுக்கு மேற்பட்ட பான்கார்டுகள் இருந்தால், அதை எப்படி ஒப்படைப்பது தெரியுமா? ஆன்லைன் + ஆஃப்லைன், இந்த இரண்டிலுமே பான் கார்டை சரண்டர் செய்ய விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் சரண்டர்: PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதன்மேல், நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை பதிவிட வேண்டும்.. ITEM NO: 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை தரவேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL வெப்சைட்டிற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஃப்லைன் சரண்டர்: இதற்கு படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய பான் கார்டின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.. இந்த படிவத்தை உங்கள் அருகிலுள்ள UTI அல்லது NSDL எனப்படும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் வசதி மையத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்..
பிறகு அதற்கான ஒப்புகை ரசீதை வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் அதிகார வரம்பில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்.. அதில், வருமான வரித் துறையின் வெப்சைட்டில், உங்கள் பகுதியின் அதிகார வரம்பு அதிகாரி யார்? என்பதை அறியலாம்..
இந்த கடிதத்தில், உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதுடன், சரணடைய வேண்டிய நகல் பான் கார்டின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் எனப்படும் NSDL -லிருந்து பெறப்பட்ட ஒப்புகை ரசீதையும் சான்றளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications