நீங்க தண்ணியை நிறுத்துனா.. நாங்க உங்க மூச்சை நிறுத்திடுவோம்.. இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ராணுவம்
டெல்லி: எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.
அவரின் இந்த ஆணவமான பேச்சு, இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு அலைகளை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி பேசிய இந்த கருத்துக்கள் தீவிரவாதி ஹபீஸ் சயீத் பேசிய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றன. ஹபீஸ் சயீத் இதேபோல் இந்தியா தண்ணீர் தரவில்லை என்றால்.. நாங்கள் பாதிக்க மாட்டோம். இந்தியாதான் அதன் விளைவுகளை சந்திக்கும், கடுமையான விலைகளை சந்திக்கும்.. இந்தியர்கள் உயிரை விட வேண்டி இருக்கும் என்று கூறி இருந்தார்.
Pakistan DG ISPR threatens and calls for mass killing of the Indian People
— Career247Official (@Career247Offici) May 22, 2025
"You close our water , we will stop your breath" pic.twitter.com/abNGOijBjH
அதே கருத்தை இப்போது அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அங்கே பாகிஸ்தான் ராணுவம் - தீவிரவாத அமைப்பு இரண்டும் ஒரே மரத்தில் செல்லும் இரண்டு கிளைகள், இரண்டிற்கும் வேறுபாடு எல்லாம் இல்லை என்று சொல்வது வழக்கம் . அதை நிரூபிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு தீவிரவாதி சொன்ன அதே கருத்தை சொல்லி இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் எல்லாம் இதை கண்டும் காணாமல் உள்ளது.
பாகிஸ்தான் உடன் 1960 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது.
மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இந்த செனாப் நதி பாய்கிறது. இது 3 வாரங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு ஓடுகிறது.
வற்றிய நதிகள்
1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது. மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications