பிரேமலதாவால் வெடித்த சிரிப்பலை! "அனுபவம் பேசுதா ஓபிஎஸ்"னு கேட்ட தங்கம் தென்னரசு! விஜய் மைல்ட் குபீர்
சென்னை: தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு தண்ணீர் பாட்டிலை வைக்குமாறு பிரேமலதா கூறிய கருத்துக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த போது குறுக்கே வந்த தங்கம் தென்னரசுவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் திமுகவின் இடைச்செருகல் கோரிக்கையை எதிர்த்து அவையில் அதிமுகவினர் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கோரிக்கையான புதிய நடுவர் ஆணையம் அமைப்பது குறித்து அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளக்கினர்.
இதையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "விஜய் பிறந்தநாளில் இந்த மாமன்றத்திற்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
அதாவது அவை பணியாளர்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் டம்ளரில் தண்ணீர் வைத்து வருகிறார்கள். இதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது.
அந்த டம்ளரில் தண்ணீரை கொண்டு வருவதும் பிறகு அதை திரும்ப கொண்டு செல்வதும் என அவர்களுக்கு இருக்கும் பணிகளுக்கு மத்தியில் இந்த பணியையும் செய்கிறார்கள்.
இன்று டெக்னாலஜி எவ்வளோ முயன்றுவிட்டது. எனவே ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் வாட்டர் பாட்டில் கொடுத்துவிட்டால் அவர்கள் அவர்களது பணியை பார்ப்பார்கள். அவை முடிந்ததும் அந்த வாட்டர் பாட்டிலை எடுத்துச் சென்றுவிடலாம்.
இதனால் அரசுக்கு எந்த செலவும் ஆகிவிடாது என்றார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், "அண்ணியார் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த கருத்து ஏற்புடையதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி அடிக்க வாய்ப்பிருக்கிறது" என கூறியதால் அவையில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட தங்கம் தென்னரசு, "ஒரு வேளை அவருடைய (ஓபிஎஸ்) தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக தண்ணீர் பாட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்" என தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அப்போதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
நடந்தது என்ன?
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், சட்டசபையில் நேரடியாக நடக்கவில்லை; மாறாக 2022 ஜூன் 23 அன்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அரங்கேறியது.
அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், பின்னர் தமிழ்நாடு சட்டசபையிலும் விவாதப் பொருளாக மாறி சுவாரசியமான சில விவாதங்களை உருவாக்கியது. இந்த விவகாரம் குறித்த முழுமையான பின்னணி மற்றும் சட்டசபையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் இதோ:
ஒற்றைத் தலைமை மோதல்: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் ஓ. பன்னீர்செல்வம் (OPS) இடையே 'ஒற்றைத் தலைமை' குறித்து உச்சக்கட்ட மோதல் நிலவியபோது, ஜூன் 23, 2022 அன்று சென்னை வானகரத்தில் கட்சியின் பொதுக்குழு கூடியது.
மேடையில் நடந்த கசப்பு: கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். ஓபிஎஸ் மேடைக்கு வந்தபோது, அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், கட்சியின் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்து மேடையை விட்டு வெளியேறினர்.
தண்ணீர் பாட்டில் வீச்சு: ஓபிஎஸ் மேடையை விட்டு இறங்கி நடந்து சென்றபோது, ஆத்திரமடைந்த சிலர் அவர் மீது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வீசினர். அவை அவரது பாதுகாப்பு அதிகாரி மீதும், அவருக்கு அருகிலும் விழுந்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பொதுக்குழு சம்பவத்திற்குப் பிறகு, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இந்த தண்ணீர் பாட்டில் விவகாரம் விவாதப் பொருளாக மாறியது.
சட்டசபையில் ஓபிஎஸ் உருக்கம்: சட்டசபையில் ஒரு விவாதத்தின் போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், தன்னை கட்சியின் பொதுக்குழுவில் மிக மோசமாக நடத்தினார்கள் என்றும், தன் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள் என்றும் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உருக்கமாகக் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications