மொழி அழிந்தால் இனம் அழியும்.. உரிமையை பேசினால் தேசத்துரோகி என்பார்கள்.. சீமான் ஆவேசம்
சென்னை: பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என்றும் மொழி அழிந்தால் இனம் அழியும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும், உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற ஆவின் வாயில் அருகே தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிமையாக இருக்கின்ற வரை உன்னை ஜனநாயகவாதி என்று சொல்வாங்க.. உரிமை என்று பேசிவிட்டால் தேசத்துரோகி என்று சொல்லி விடுவார்கள். இப்போது அப்படி தானே நடக்கிறது. அவன் பார்வையில் இப்போது நாமெல்லாம் தேசத்துரோகி தான். அதே நிலைமை இங்கு வந்துவிடக்கூடாது. மாநிலங்கள் பிரிக்கப்பட்டது மொழி வாரியாக தான். சாதி வழியாக, மத வழியாக எல்லாம் கிடையாது.
இந்தி பேசுகின்ற மாநிலங்களில் இந்தி ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக, பண்பாட்டு, பயன்பாட்டு மொழியாக இருப்பதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. என் மொழி தமிழ், தொடர்பு மொழி.. அருகில் இருக்கிற தெலுங்கர் கூடவோ, கன்னடர் கூடவோ, பீகாரியோடோ, குஜராத்தியோடோ.. தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலத்தை வைத்துக்கொள்ள வேண்டியது தானே.. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டுவிட்டார்கள்..
எதோ ஒரு ஓரத்தில் இருந்து போராடிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். ஒரு 50, 100 பேர் அமர்ந்து போராடிக்கொண்டு இருக்காங்க என்று நினைக்கிறார்கள். தம்பி.. வண்டி நிறைய இருக்கிற குப்பைய எரிப்பதற்கு வண்டி நிறைய தீ வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு தீப்பட்டி ஒரு தீக்குச்சி தான் தேவை. அது மாறி தான் இது.. ஒரு சிறு பொறி தான் பெரும் காட்டையே அழித்துவிடும்.
அதனால் புரட்சி தீ எப்போதும் ஒரு புள்ளியில் தான் பற்ற வைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு புள்ளி. 2006ல் பெரும் நெருப்பு எரிந்த போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கேட்டுக்கொண்டதன் பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டார்கள். அப்போது அவர் சட்டம் இயற்றினார். அதனை அவர்கள் மதிக்கவில்லை. அப்போது நீங்கள் போடும் சட்டத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும். மாநில அரசு போடும் சட்டங்களை நாங்க மதிக்க தேவையில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்..
அப்போது நாங்கள் மட்டும் ஏன் மதிக்க வேண்டும். அதற்கு எதாவது பதில் இருக்கிறதா. மாநில அரசுகள் எல்லாம் சேர்ந்து தான் மத்தியில் உள்ள அரசு. அதுக்கு தனியாக ஒன்றும் கிடையாது. இது நாடுகளின் ஒன்றியம் தான். யுனைட்டட் கிங்க்டம், யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் அரேபியா, ஐரோப்பிய யூனியன் என்பது போல யுனைட்டட் ஸ்டேட் ஆப் இந்தியா. நீங்க நினைத்துவிட்டீர்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று.
தம்பி.. பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும். இதை தடுக்க முடியாது. எனக்கு என் தாய் மொழி முக்கியம். என் கலை இலக்கிய பண்பாடு முக்கியம். மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது எல்லாம் அவரவர் மொழி, அவரவர் கலை, இலக்கியம், பண்பாடு பாதுகாப்பட வேண்டும் என்பதற்காக தான். மாநிலம் என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. மாநிலம் என்பது ஒரு தேசிய இனத்தின் உணர்வு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications