Ration card | உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து போனால், ஸ்மார்ட் நகல் அட்டை எளிதாக பெறுவது எப்படி?
சென்னை: உங்கள் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம், புதிய நகல் அட்டையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் என்ன சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும். பொருட்கள் வாங்குவதற்கு எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை.. பொருட்களை உடனே பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மட்டும் போதும். விவரமாக பார்ப்போம்.
உங்கள் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் பதற்றப்பட வேண்டாம். சிலர் நகல் கூட எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். அப்படியான சூழலில் ரேஷன் அட்டை வாங்க எப்படி அலைவது என்ற கவலைகள் இருக்கும். அவர்களுக்காக அரசு எளிய வழிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது,

1. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
நீங்கள் நேரடியாக உணவுப் பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNPDS (www.tnpds.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழையவும் அதாவது லாக் இன் செய்ய வேண்டும். அங்குமுகப்பு பக்கத்தில் உள்ள "நகல் மின்னணு அட்டை விண்ணப்பிக்க" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு காரணம் கேட்கும். அதில் 'அட்டை தொலைந்துவிட்டது' என்பதைத் தேர்ந்தெடுத்து, அதற்கான விவரங்களை உள்ளிடவும். பின்னர் நகல் அட்டைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
உடனடியாகப் பெறுவது எப்படி?
விண்ணப்பித்த பிறகு, அட்டை அச்சிடப்பட்டு உங்கள் பகுதிக்கு வர சில நாட்கள் ஆகும். ஆனால், உங்களுக்கு உடனடியாக விவரங்கள் தேவைப்பட்டால், PDF டவுன்லோட் டவுன்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பித்த பிறகு அல்லது உங்கள் லாகினில் "மின்னணு அட்டை கோப்பு பதிவிறக்கம்" என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் PDF நகலை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை பிரிண்ட் எடுத்து தற்காலிகமாகப் பயன்படுத்த முடியும். அதேபோல் இரேஷன் கார்டும் பயன்படுத்தலாம். உங்கள் மொபைலில் TNPDS App மூலமாகவும் டிஜிட்டல் கார்டைக் காண்பித்து ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று புதிய அட்டையை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இ-சேவை மையத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம்
நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவும் நகல் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நீங்கள் அங்கு சென்றாலும் உடனே பிளாஸ்டிக் அட்டையாக கைக்குக் கிடைக்காது. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்காகவே இ சேவை மையங்கள் செயல்படுகின்றன. உங்கள் குடும்ப அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்து அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து நகல் அட்டை வாங்கி தர உதவுவார்கள். அங்கும் நகல் அட்டைக்கான அரசு கட்டணம் மற்றும் சேவை கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.
ஒப்புதல்
நீங்கள் விண்ணப்பித்த பிறகு, உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலர் (TSO) அதைச் சரிபார்த்து அங்கீகரிக்க வேண்டும். இதற்குச் சில நாட்கள் ஆகும்.
உங்களுக்குப் பிளாஸ்டிக் அட்டை வருவதற்குத் தாமதமானால், இ-சேவை மையத்திலேயே "மின்னணு அட்டை நகல்" (e-Ration Card) பதிவிறக்கம் செய்து தருமாறு கேட்கலாம். அவர்கள் ஒரு பிடிஎப் கோப்பை பதிவிறக்கம் செய்து தருவார்கள். அதை நீங்கள் ஒரு லேமினேஷன் (Lamination) செய்து வைத்துக்கொண்டால், அதை வைத்தே ரேஷன் கடையில் பொருட்களை உடனடியாக வாங்க முடியும்.
அரசு விதிகளின்படி, இந்தத் தாள் நகலும் செல்லுபடியாகும். அசல் பிளாஸ்டிக் அட்டை வேண்டும் என்றால், ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு 15 முதல் 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். தற்காலிகமாகப் பயன்படுத்த இ-சேவை மையத்தில் PDF பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் ரேஷன் கார்டு எண் இல்லை என்றாலும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மட்டும் இருந்தால் போதுமானது. அதை வைத்தே உங்கள் ரேஷன் கார்டு விவரங்களை எடுத்துவிடலாம். இ-சேவை மையத்திலோ அல்லது நீங்களாகவோ கீழே உள்ள முறையைப் பின்பற்றி விவரங்களைப் பெறலாம்:
1. TNPDS இணையதளம்/செயலி மூலம் (நீங்களே செய்யலாம்)
TNPDS இணையதளத்திற்குச் சென்று, உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்யவும். உங்கள் மொபைலுக்கு வரும் OTP-யை உள்ளிட்டு லாகின் செய்யவும். உள்ளே சென்றதும் "அட்டை விவரங்கள்" அல்லது "Smart Card Print" என்ற பகுதியில் உங்கள் ரேஷன் கார்டு எண், குடும்பத் தலைவர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பார்த்துக்கொள்ளலாம்.
2. இ-சேவை மையத்தில்
அங்கிருப்பவர்களிடம் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்தால், அவர்கள் அதை வைத்து லாகின் செய்து உங்கள் ரேஷன் கார்டு எண்ணைக் கண்டறிந்து விடுவார்கள். அதை வைத்து உடனடியாக e-Ration Card (PDF) பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துத் தருவார்கள்.
SMS மூலம் தெரிந்துகொள்ள
உங்கள் மொபைலில் இருந்து கீழ்க்கண்டவாறு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உங்கள் அட்டை விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது: PDS 101 என்று டைப் செய்து 9980904040 என்ற எண்ணிற்கு அனுப்பவும். (குறிப்பு: இது உங்கள் அட்டை செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும்).
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications