கடைசி வரி முக்கியம்.. மகா விஷ்ணுவை பேச அழைத்தவர்களுக்கும் மண்டையில் என்ன இருக்கு.. ஐஎப்எஸ் அதிகாரி
சென்னை: ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை வரும் என்றும் ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும் என்றும் மாணவர்களிடம் பேசிய ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இவரது பேச்சை கடுமையாக கண்டித்துள்ள ஐஎப்எஸ் அதிகாரி ஸ்ரீதரன், இவரை மாணவர்களிடம் பேச அழைத்தவர்களுக்கும் மண்டையில் என்ன இருக்கிறது என்பதற்கான விடை எதுவுமே இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் இவர் மூடநம்பிக்கையை விதைத்தாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு பேசிய ஒவ்வொரு கருத்துக்களையும் தனித்தனி வீடியோவாக செய்து வெளியிட்டுள்ள நெட்டிசன்கள், மூடநம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் விதைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வீடியோவில், ஆன்மீக பேச்சாளர் ஸ்ரீதரன் கூறுகையில், ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை வரும்.. ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும்.. ஒரு மந்திரத்தை படித்தால் இங்கிருந்து அங்கு பறந்து போகலாம்.. அத்தனை ரகசியங்களையும், நம் முன்னோர்கள் பனை ஓலையில் எழுதி வைத்துவிட்டு சென்றார்கள். ஆனால் பின்னால் வந்த ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் சதி வேலை காரணமாக, நம் மக்களுடைய ஞானம் மண்ணோடு மண்ணாகி புதைந்தது.. எதுவுமே இல்லை" என்று கூறினார்.
இந்த வீடியாவை வெளியிட்டுள்ள சென்னையைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரியான ஸ்ரீதரன் வெளியிட்ட ட்வீட் பதிவில், "இவர் பேசும் கடைசி வரி முக்கியம்.. இவரை அரசாங்கப் பள்ளியில் மாணவர்களிடம் பேச அழைத்திருக்கிறார்கள். அவர் சொல்லும் கடைசி வரி, இவருக்கும், இவரை மாணவர்களிடம் பேச அழைத்தவர்களுக்கும் மண்டையில் என்ன இருக்கிறது என்பதற்கான விடை எதுவுமே இல்லை, கேவலமான ஜென்மங்கள்" என்று விமர்சித்துள்ளார்.
இவர் பேசும் கடைசி வரி முக்கியம்.
— 🚶🏽பயணி தரன் (@PayaniDharan) September 6, 2024
இவரை அரசாங்கப் பள்ளியில் மாணவர்களிடம் பேச அழைத்திருக்கிறார்கள். அவர் சொல்லும் கடைசி வரி, இவருக்கும், இவரை மாணவர்களிடம் பேச அழைத்தவர்களுக்கும் மண்டையில் என்ன இருக்கிறது என்பதற்கான விடை: எதுவுமே இல்ல.
கேவலமான ஜென்மங்கள்.#பயணிதரன்… pic.twitter.com/thiMvH45JG
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் தாமு மாணவர்களிடம் தன்னம்பிக்கைவிதைக்கும் நிகழ்ச்சியிலும் இதேபோல் எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications