பாலகிருஷ்ணன் IPS மத்திய அரசு பணிக்கு மாற்றம்.. எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி ஆக நியமனம்! யார் இவர்?
சென்னை: தமிழ்நாடு காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி பாலகிருஷ்ணனை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜியாக பாலகிருஷ்ணனை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மற்றொரு முக்கிய ஐபிஎஸ் அதிகாரியான ஐ.ஜி பாலகிருஷ்ணன் மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யார் இந்த பாலகிருஷ்ணன்?
கன்னியாகுமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் வேளாண் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். அதன் பின்னர் ரயில்வே கணக்கு சேவை தேர்விலும் வெற்றி பெற்று இருந்தார்.
அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோர் அகில இந்திய அளவில் 140 வது இடம் பிடித்தார். இதன்மூலம் இந்திய வெளியுறவுத் துறையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தன் தாயாரின் விருப்பத்திற்காக காவல்துறை பணியை தேர்வு செய்தார் பாலகிருஷ்ணன்.
அதிரடி நடவடிக்கைகள்
கடந்த 2003 ஆம் ஆண்டு கேடர் தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்ளராக பணியாற்றினார். கிராமத்திற்கு காவல்துறையைக் கொண்டு செல்வோம் என்ற திட்டத்தை முன்னெடுத்து கிராமங்களை தத்தெடுத்து, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மதுரை நாடாளுமன்றத் தொகுதி சவால் நிறைந்ததாக கருதப்பட்டது. அப்போது திமுக சார்பில் மு.க.அழகிரி வேட்பாளராக இருந்தார். அப்போது பாலகிருஷ்ணன் மதுரை மாவட்ட எஸ்பியாக சிறப்பாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
மதுரை எஸ்.பி
மீண்டும் 2012-14 ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் மதுரை மாவட்ட எஸ்பியாக பாலகிருஷ்ணன் சிறப்பாகப் பணியாற்றினார். மதுரை மாவட்ட எஸ்பியாக பாலகிருஷ்ணன் இருந்தபோது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மதுரை கிரானைட் ஊழல் தொடர்பாக 80 வழக்குகளை அதிரடியாக பதிவு செய்தார்.
2011 ஆம் ஆண்டு திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சிக்கி கொண்ட 400 பேரை திருப்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் குழுவினர் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஊர்க்காவல் படையில் திருநங்கைகளை பணியமர்த்தி பாராட்டை பெற்றவர் பாலகிருஷ்ணன்.
மக்களின் பாராட்டைப் பெற்றவர்
2017 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை எந்த வன்முறை சம்பவமும் இன்றி கையாண்டதில் அப்போது மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் செயல்பட்ட விதம் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றது.
2019ல் சென்னை பெருவெள்ளத்தின்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்து கொண்டபோது படகில் சென்று பொதுமக்களை மீட்டு பாராட்டை பெற்றார். 2020 ஆம் ஆண்டு ரயில்வே டிஐஜியாக பணியாற்றியபோது ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 500க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு வழங்க வழிசெய்தார்.
2021 ஆம் ஆண்டு திருச்சி சரக ஐஜியாக பணியாற்றியபோது போலீஸ் கிளப்புகளை தொடங்கி குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர்
இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். கோவையில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வந்த சூழலில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சிறப்பாகப் பணியாற்றினார் பாலகிருஷ்ணன்.
அயல் பணிக்கு மாற்றம்
இதையடுத்து சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக ஐ.ஜி-ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவரை அயல் பணிக்கு மாற்றி, எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜியாக பாலகிருஷ்ணனை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்ஸை தற்போதைய பொறுப்பில் இருந்து விடுவிக்க உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
-
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
ஒட்டுமொத்த ஊரே பார்க்க..பஸ் ஸ்டாண்டில் கணவன் செய்த செயல்! ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சது! ஷாக் ! -
ஒரு சின்ன தவறு.. ஒரே இரவில் ஒட்டுமொத்த குடும்பமும் அழிஞ்சு போச்சு.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க -
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காவலர் செய்த தரமான சம்பவம் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட்












Click it and Unblock the Notifications