சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஐடி மாணவி பலாத்காரம்.. உடனே கைது செய்ய டிஜிபி, தலைமை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த மாணவி ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னைப் போல பல மாணவிகளும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம், கல்லூரி நிர்வாகத்தினர் புகைப்பட ஆதாரம் கேட்டதாக அதிர்ச்சித் தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி

சென்னை ஐஐடி மாணவி

சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஒருவர், சக மாணவர் கிங்ஷீக்தேவ் சர்மா என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும், கிங்ஷீக்தேவின் நண்பர்களான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோரும் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 நடவடிக்கை எடுக்காத பேராசிரியர்

நடவடிக்கை எடுக்காத பேராசிரியர்

பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து ஐ.ஐ.டி பேராசிரியர் எடமன் பிரசாத்திடம் புகார் கூறியுள்ளார். ஆனால், புகார் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்திலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் மாணவி புகார் அளித்தார். பாலியல் புகார் என்பதால் வழக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

சிபிசிஐடிக்கு மாற்றம்

மாணவி அளித்த கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரின்கீ ஐஐடி மாணவர்கள் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, பேராசிரியர் எடமன பிரசாத் உள்ளிட்ட 8 பேர் மீது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்தால், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹெல்டர் குழுவினர் நேற்று முன்தினம் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி, பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினார்.

போட்டோ ஆதாரம் கேட்டார்கள்

போட்டோ ஆதாரம் கேட்டார்கள்

அப்போது, லேப் அசிஸ்டெண்ட் ஒருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, அவர்கள் தன்னிடம் புகைப்பட ஆதாரம் கேட்டதாகவும், அதன் பின்னரே போலீசில் புகார் அளித்தேன் என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

மேலும், முனைவர் பட்டத்திற்காக நான் சமர்ப்பித்த கட்டுரைகளுக்கும் பேராசிரியர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. என்னைப் போல பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி பாதிக்கப்படும் என்பதால் அமைதியாக இருந்து வருகின்றனர் என்றும் அந்த மாணவி விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

English summary
IIT Madras student told in inquiry that IIT professors asked for photo evidence when she lodged sexual harassment complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X