கொடூரம்! சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னை ஐஐடியில் மேற்கு வங்க பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி 2017ஆம் ஆண்டு முதல் வேதியியல் துறையில் பிஹெச்டி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
அவருடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் சக மாணவர்கள் கடந்த 2020இல் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆராய்ச்சி மாணவி
இது குறித்துச் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மாணவி துறைப் பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், ஆராய்ச்சி மாணவியின் புகாரைப் பேராசிரியர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் ஆராய்ச்சி மாணவி தெரிவித்துள்ளார். ஐஐடி வளாகத்தில் உடல் ரீதியாகத் தான் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை இல்லை
இருப்பினும், இது தொடர்பாகக் கடந்த ஜூன் 2021இல் பதியப்பட்ட வழக்கில் பாலியல் வன்கொடுமை, வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஐஐடி நிர்வாகமும் சரி, போலீசாரும் சரி இந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உளவியல் ரீதியாக அந்தப் பெண் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான அந்தப் பெண் மூன்று முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

மாதர் சங்கம்
இந்நிலையில், கடந்த 22இல் பாதிக்கப்பட்ட மாணவி தமிழக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவர், இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றக்கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை ஐஐடி
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மொத்தம் 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஐஐடி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளிப்போம் என்றும் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை எழுப்பிய மாணவியின் விவகாரத்தை விசாரிக்க அனைத்து செயல்முறைகளையும் ஐஐடி மெட்ராஸ் பின்பற்றியுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications