கொரோனா "அபாய பகுதியாக" மாறிய சென்னை ஐஐடி.. மேலும் 25 பேருக்கு தொற்று.. மொத்தம் 171 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தின் புதிய கொரோனா பரவல் மையமாக சென்னை ஐஐடி உருவெடுத்து வருகிறது. சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஐஐடியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
நாட்டின் வட இந்திய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒருநாள் கொரோனா பாதொப்பு எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டாத நிலையில் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 20,386 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 77 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனைகளில் 447 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையில் தான் அதிகபட்சமாக நேற்று மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பரவல் திடீரென தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஐஐடியில் தற்போது மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிற நிலையில் புதிய தொற்று பரப்பும் பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. உருவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னை ஐ.ஐ.டியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் உருமாறிய புதுவகை வைரஸ் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications