சென்னை ஐஐடியில் பிடெக் மாணவர் தற்கொலை! 3 மாதங்களில் நடக்கும் 4ஆவது தற்கொலை! பதற்றம்
சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மற்றொரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 மாதங்களில் அங்கு நடக்கும் நான்காவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.
சென்னை கிண்டியில் சென்னை ஐஐடி செயல்பட்டு வருகிறது. அங்கே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.

அதேநேரம் அங்கே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறியே வருகிறது. அதன்படி இன்றும் அதுபோல ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலை: சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள விடுதி அறையில் மாணவர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த மாணவர் இரண்டாம் ஆண்டு மாணவர் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பிறகு இது தற்கொலை என்பது உறுதியானால், கடந்த 3 மாதங்களில் சென்னை ஐஐடியில் நடக்கும் நான்காவது தற்கொலை இதுவாகும். தற்கொலையால் உயிரிழந்த மாணவர் பிடெக் 2ஆம் ஆண்டு படித்த கேதார் சுரேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர் தற்கொலைகளால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
தொடரும் தற்கொலை: முன்னதாக, ஏப்ரல் 2ஆம் தேதி, சென்னை ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வயது 32 வயதான சச்சின் குமார் என்று அடையாளம் காணப்பட்டது. இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அதற்கு முன், மார்ச் மாதம் அங்கே மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான அவர், ஆந்திராவைச் சேர்ந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல பிப்ரவரியில், சென்னை ஐஐடியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு எண்கள்: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications