பரபரத்த சென்னை ஐஐடி.. மாணவியை கட்டிப்பிடித்து சில்மிஷம்.. பைக்கில் கடத்த முயற்சி.. சிக்கிய எட்வர்ட்
ஐஐடி வளாகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: நைட் நேரத்தில், ஐஐடி வளாகத்துக்குள்ளேயே அத்துமீறி உள்ளார் இளைஞர் ஒருவர்.. என்ன நடந்தது சென்னை ஐஐடி காம்பஸில்?
சென்னை கிண்டி ஐஐடியில் ஏராளமான பல்வேறு மாநில, மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.. இந்த வளாகத்தில் அடர்ந்த வனப்பகுதியும் உள்ளது.
இந்த இடம் முன்பிருந்தே இப்படித்தான் மண்டிகள் நிறைந்து காணப்படுகிறது.. தற்போது சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதில்லை.

மிட்நைட்
அதிலும் இரவு நேரங்களில் மழை என்பதால், பெரும்பாலும் யாரும் வெளியே வருவதில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பயிலும் மாணவி ஒருவர், தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு ஐஐடி வளாகத்தில் உள்ள தன்னுடைய ரூமுக்கு தனியாக நடந்து சென்றுள்ளார்... அப்போது அந்த வழியாக பைக்கில் ஒரு இளைஞர் வந்துள்ளார்.. அவர் தனியாக நடந்து வரும் மாணவியை கவனித்துவிட்டு, அருகில் வந்து பைக்கை குறுக்கே நிறுத்தி உள்ளார்..

சில்மிஷம்
எதுவுமே பேசாமல், "பைக்கில் ஏறும்மா.... அப்புறம் பேசிக்கலாம்" என்று தவறான நோக்கத்தில் அழைத்துள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போன மாணவி, அந்த இளைஞரை கடுமையாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. ஆனால், அதை கொஞ்சமும் காதில் வாங்காத அந்த இளைஞர், டக்கென மாணவியின் கையை பிடித்து இழுத்து, அவரே தன்னுடைய பைக்கில் ஏற்ற முயன்றுள்ளார்... இதனால் பயந்துபோன மாணவி என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்.. மாணவிக்கோ தமிழ் தெரியாது.. வெளிமாநில மாணவி என்பதால், ஆங்கிலத்தில் அந்த இளைஞரை திட்டியிருக்கிறார்..

ஹெல்ப் ஹெல்ப்
ஆனால், அந்த இளைஞருக்கோ ஆங்கிலம் தெரியாது.. மாணவி இங்கிலீஷில் பேசியதும், "ஓ.. உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமா" என்று கிண்டலாக கேட்டுவிட்டு, மறுபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.. மேலும், அந்த மாணவியிடம் தவறாகவும் நடக்க முயன்றுள்ளார்... இதனால் ஹெல்ப் ஹெல்ப் என்று மாணவி கூச்சலிட்டுள்ளார்... அந்த சத்தம் கேட்டு சிலர் ஓடி வந்ததால், அந்த இளைஞர் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார்... இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசிலும் மாணவி புகார் செய்தார். உடனடியாக விசாரணையை போலீசார் தொடங்கினர்.

சில்மிஷ காமுகன்
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, ஒருவழியாக அந்த இளைஞரை பிடித்துவிட்டனர்.. அவர் பெயர் எட்வர்ட்.. 30 வயதாகிறது.. வேளச்சேரியை சேர்ந்தவர்என தெரியவந்துள்ளது.. அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. பாதுகாப்பு மிகுந்த சென்னை ஐஐடி வளாகத்துக்குள்ளேயே, மாணவியிடம் இப்படி அத்துமீறிய சம்பவம் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்...
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications