தமிழ்நாட்டில் விஜய் உரை மெய்சிலிர்க்க வைத்தது.. துணிச்சல் பேச்சு.. பாரிவேந்தர் கருத்து
சென்னை: தமிழ்நாட்டில் விஜய் உரை மெய்சிலிர்க்க வைத்தது. மகிழ்ச்சியாக கூட்டம் வந்ததையும் அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. எந்த கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ அதை துணிவுடன் வெளிப்படுத்தி உள்ளார். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை விஜய் முன்னிலைப்படுத்தியுள்ளார் என்று ஐ ஜே கே கட்சி தலைவர் பாரிவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசும் போது, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

"திமுக தான் நம்ம அரசியல் எதிரி..! " மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சினு சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. அவுங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..? திராவிட மாடல் என்று சொல்லிக்கிட்டு அண்ணா, பெரியார் பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு கும்பல்" என்று திமுகவை நடிகர் விஜய் விமர்சித்தார். இதே போல் பாஜகவையும் நடிகர் விஜய் விமர்சித்தார்.
இதுபற்றி ஐ ஜே கே கட்சி தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும், அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது, இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் உங்கள் முயற்சி வெற்றி பெற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றிலும் உச்சமாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறீர்கள். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்." என்று கூறியுள்ளார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications