யாருக்காக இளையராஜா வழக்குப் போட்டார் தெரியுமா? உரிமை யாருக்கு? வழக்கறிஞர் அளித்த விளக்கம்!
சென்னை: காப்புரிமைச் சட்டம் இசையமைப்பாளருக்குத்தான். பாடலுக்காக உரிமையை வழங்கி உள்ளதாகச் சொல்கிறார் அவரது வழக்கறிஞர் சரவணன்.
இளையராஜா பாடல்கள் உரிமை யாருக்கு உள்ளது என்று முதலில் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன் மிகப் பெரிய பட்டிமன்றமே நடத்தினார்கள். அந்தப் பேச்சுக்கள் இப்போது அடங்கி விட்டன.

அடுத்து இளையராஜா இசை முக்கியமா? அல்லது பாடல் வரிகள் முக்கியமா? என்று இன்னொரு சர்ச்சை தொடங்கிவிட்டது. பலர் வரி இல்லாமல் பாடல் இல்லை என்கிறார்கள்.
இசை இல்லாமல் பாடல் வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? முதலில் ட்யூன் அப்புறம் தான் வரிகள் என்று பலர் வரிந்து கட்டிக் கொண்டு பட்டி மன்றம் நடத்தி வருகிறார்கள்.
இசையைத் தனியே கேட்கலாம். வரிகளை அப்படி தனியே கேட்க முடியுமா? என்பது இவர்களின் வாதமாக உள்ளது.
இந்தச் சர்ச்சை கங்கை அமரன் பேச்சால் மேலும் வலுப்பெற்றுவிட்டது. முதலில் இளையராஜா Vs உரிமை என்று இருந்தது. அப்புறம் இளையராஜா Vs வைரமுத்து என்று மாறியது. அதன்பின்னர் கங்கை அமரன் Vs வைரமுத்து எனத் திசை திரும்பியது. இப்போது கங்கை அமரன் Vs நெட்டிசன் என நீண்டு கொண்டே உள்ளது.
உண்மையில் காப்புரிமைச் சட்டம் பாடல்களுக்கான உரிமையை யாருக்கு வழங்கி உள்ளது. பாடலாசிரியர்கள் உரிமை என்பது எப்படி வேறுபடுகிறது?

இப்படி பல்வேறு சந்தேகங்களுக்கு ஒரு தெளிவான சட்ட விளக்கங்களை அளித்துள்ளார் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன். இளையராஜா வழக்குப் போடுவதற்காக நோக்கம் என்ன? அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.
இந்த வழக்கு குறித்த நிலவும் சர்ச்சைகள் பற்றி சரவணன், "இந்தியாவின் காப்புரிமை சட்டமானது 2012 இல் சில புதிய ஷரத்துகளுடன் மாற்றி அமைக்கப்பட்டது.
அப்போது இசை என்பதைத் தனியாகப் பகுத்தார்கள். திரைப்படத்தில் உள்ள இசைக்கான உரிமை என்பது வேறு. ஒட்டுமொத்த திரைப்படமானது சினிமாட்டோகிராஃப் என்று அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாடல்கள் என்பது தனி இசை சார்ந்த வேலை என்று சட்டத்தில் பிரித்துள்ளார்கள். ஒரு படத்தினை ஒருவர் வாங்கும்போது, அதன் ஒட்டுமொத்த உரிமையானது வாங்கியவரைச் சேரும். அவர் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது.
ஆனால், அந்தப் படத்தில் உள்ள பாடல்களை அவர் தனியாக உரிமையைக் கோர முடியாது. அவர் மட்டும் அல்ல வேறு யாருமே உரிமையைக் கோர முடியாது.

அப்படி என்றால் அதன் உரிமையாளர் யார்? சட்டம் இதற்கு என்ன சொல்கிறது என்றால், அந்தப் பாடல்களை இசையமைத்த இசையமைப்பாளர்தான் அதன் உரிமையாளர். அவருக்குத்தான் உரிமை உள்ளது.
ஆகவே, மக்கள் மத்தியில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழப்பம் உள்ளது. அதுதான் தயாரிப்பாளர் இசையமைத்ததற்குப் பணம் கொடுத்துவிட்டாரே? அதன்பிறகு உரிமை எப்படி இசையமைப்பாளர் கோர முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
2012க்குப் பிறகு படத்தில் இசையமைத்த பாடல்களின் உரிமையானது இசையமைப்பாளரைத்தான் சேரும். தயாரிப்பாளர் பணம் கொடுத்தது படத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே. அதை அவர் உருவாக்கவில்லை. உருவாக்கியவர் இசையமைப்பாளர்தான். அவருக்குத்தான் காப்புரிமை என்று சட்டம் சொல்கிறது.
இந்தப் பஞ்சாயத்துக்கு எல்லாம் தொடக்கப்புள்ளி இளையராஜா பாடல் உரிமை சார்ந்து எழுந்த பிரச்சினைதான்.
ஆகவேதான் இளையராஜா தனது உரிமையை நிலைநாட்ட சட்டப்படி போராடி வருகிறார்.
இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் 1980களுக்குப் பின்னால் வந்தவை. அன்றைய காலகட்டத்தில் காப்புரிமை பற்றி நாட்டில் யாருக்கும் பெரிய விழிப்புணர்வு கிடையாது.
அன்றைக்கு டேப் ரெக்கார்ட்டில் பாடல்கள் கேசட் மூலம் வெளியாகும். அப்புறம் விசிடி வந்தது. அன்றைக்கு ஒரு இசையமைப்பாளர் ஒரு நிறுவனத்திற்குப் பாடல் உரிமையை வழங்கி இருந்தால் என்ன உரிமையைக் கொடுத்திருக்க முடியும்?

இசைத்தட்டு போட்டு விற்பதற்காக உரிமையை வழங்கி இருக்க முடியும். அடுத்து கேசட் உரிமையைக் கொடுத்திருப்பார். அதன்பிறகு சிடி அல்லது விசிடி உரிமையை வழங்கி இருப்பார்.
அன்றைக்கு ஒடிடி என்று அன்றைக்கு ஒரு தளமே கிடையாது. ஒடிடி உரிமை என்று உருவாகவே இல்லாத போது, அதற்காக உரிமையை இளையராஜா எப்படி ஒரு நிறுவனத்திற்கு வழங்கி இருக்க முடியும்?
பழைய கேசட் அல்லது இசைத்தட்டு உரிமையை வைத்துக் கொண்டு, இன்றைக்கு ஒடிடியில் எப்படி ஒருவர் வர்த்தகம் செய்ய முடியும்? அன்றைக்கு கேசட்டுக்கு வாங்கிய உரிமையை வைத்துக் கொண்டு எப்படி யூடியூப்பில் போடப் பயன்படுத்த முடியும்? Spotify தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்க முடியும்?
அது சரியா என்றால்? இல்லை என்பதுதான் வாதம். அதை சட்டப்படி நிலைநிறுத்தத்தான் இளையராஜாவின் இந்தச் சட்டப் போராட்டம். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு படத்தில் இளையராஜாவின் படத்தைப் பயன்படுத்தவோ, அதை உருமாற்றவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. அதை சட்டப்படி தடுக்கலாம்.
இந்த வழக்கு என்பது இளையராஜாவுக்கானது இல்லை. வருங்கால இசையமைப்பாளர்கள் தங்களின் உரிமை என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் இதுதான் டிரெண்ட் செட்டர் ஆக அமையப் போகிறது. ஆகவே, இளையராஜாவை இசைத்துறையினர் ஆதரிக்க வேண்டும்" என்கிறார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications