ஹைகோர்ட் உத்தரவிட்டும் 'குட் பேட் அக்லி'யில் பாடல்களை நீக்கவில்லை! இளையராஜா அவமதிப்பு நோட்டீஸ்!
சென்னை: "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் என் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் குட் பேட் அக்லி படத்தில் எனது அனுமதியின்றி பயன்படுத்தப்படும் பாடல்களை நீக்குமாறும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்ப வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அந்த குறிப்பிட்டுள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
நோட்டீஸ் அனுப்பிய காரணம்: 'குட் பேட் அக்லி' படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான மூன்று பாடல்கள் (இளமை 'இதோ இதோ', 'என் ஜோடி மஞ்சக் குருவி', 'ஒத்த ரூபாயும் தாரேன்') அவருடைய அனுமதி பெறாமல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மூன்று பாடல்களை உடனடியாகப் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்தச் சட்டவிரோதப் பயன்பாட்டிற்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இளையராஜா தனது நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏழு நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாரிப்புத் தரப்பின் பதில்: இந்த நோட்டீஸ் குறித்துப் பேசிய தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பினர், தாங்கள் அந்தப் பாடல்களுக்கான உரிமையைக் கொண்டிருக்கும் இசை நிறுவனங்களிடம் இருந்து முறையாக அனுமதி பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பாடல்களைப் பயன்படுத்தியதற்கான உரிய NOC (No Objection Certificate) சான்றிதழ்களும் தங்களிடம் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமை தொடர்பாகத் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் இசையமைத்த பாடல்களின் முழு உரிமையும் தங்களுக்கே சொந்தம் என தயாரிப்பாளர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால், இளையராஜா, ஒரு இசையமைப்பாளருக்கு அவரது படைப்புகளுக்கான 'தனிப்பட்ட உரிமை' (Moral Rights) உண்டு என்று வாதிட்டு வருகிறார்.
'குட் பேட் அக்லி' பட விவகாரம், இந்தத் தற்போதைய காப்புரிமைச் சட்டத்தின் சிக்கல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் வசம் உள்ளன.
இந்த நிலையில் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அனுப்பிய நோட்டீஸிக்கு சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் கூறியது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குட் பேட் அக்லி படத்தில் இந்த 3 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் குட் பேட் அக்லியில் இருந்து தனது பாடல்கள் நீக்கப்படாததை அறிந்தார். இதையடுத்து மைத்திரி மூவி நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்றிருக்கும் எனது பாடல்களை நீக்க வேண்டும். என் சம்மதம் இல்லாமல் என் பாடல்களை பயன்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அந்த பாடல்களை நீக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications