தங்கம் வென்று சாதித்த தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன்.. டிடிவி தினகரன் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்திய இளவேனில் வாலறிவன் 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

Ilavenil valarivan won gold medal in world cup women rifle shoot: ttv dinakaran wishes

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒகேன் முல்லர் 251.9 புள்ளிகள் உடன் வெளி பதக்கத்தை பெற்றார். சீனாவின் ஜாங் ஜியாலேவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதேபோன்று ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் 628.2 புள்ளிகளை பெற்று 14 வது இடத்தை பிடித்துள்ளார்.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் எக்ஸ் (ட்விட்டர்) சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2019ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன்.

Ilavenil valarivan won gold medal in world cup women rifle shoot: ttv dinakaran wishes

அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+