லண்டனில் இளையராஜாவின் முதல் சிம்பொனி இன்று! symphony என்றால் என்ன? சிம்பொனியின் சவால்கள் என்ன?
சென்னை: இசைஞானி இளையராஜா லண்டனில் இன்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்கிறார். இதற்கு வேலியன்ட் என பெயரிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை உலகின் சிறந்த இசைக் குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்கிறார்கள்.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா. இவர் தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்குவிப்பால் மேற்கத்திய இசை பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 700 படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இளையராஜா சிம்பொனியை உருவாக்கியுள்ளார். அதற்கு வேலியண்ட் என பெயரிட்டுள்ளார்.
லண்டனில் அரங்கேற்றம்
இதை இன்று லண்டனில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக அவர் கடந்த 6ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். சிம்பொனி என்றால் என்ன தெரியுமா, இதற்கு இளையராஜாவே அளித்த விளக்கத்தை பாருங்கள்.
சிம்பொனி என்றால் என்ன
ஒரே நேரத்தில் 4 கவிஞர்கள் 4 வித்தியாசமான கவிதைகளை சொன்னால் நம்மால் ரசிக்க முடியுமா- முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றிணைந்து தரும் இசையை நாம் கொண்டாடலாம் என தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் கனவு
இன்று சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜாவின் அது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986 ஆம் ஆண்டு, 1988 ஆகிய ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பை அவர் வெளியிட்டிருந்தார்.
திருவாசகம்
2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டதை அடுத்து அவர் தொடர்ந்து சிம்பொனியில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த சிம்பொனியின் சவால் என்ன தெரியுமா- 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுப்பதுதான்.
முதல் தமிழர்
இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஒரு தமிழர் சிம்பொனியை அரங்கேற்றுவது நமக்கு பெருமை தரக் கூடிய விஷயமாகும். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் தனது சிம்பொனியை அரங்கேற்றுகிறார்.
பெரிய இசை விருந்து
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இளையராஜா, விமான நிலையத்தில் கூறுகையில், புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக லண்டன் செல்கிறேன். ஈவன்டிம் அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களுக்கு இது பெரிய இசை விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்கிரிடிபிள் ராஜா
தமிழராக உணர்கிறேன் என்பதை விட மனிதராக உணர்கிறேன். இது என்னுடைய பெருமை அல்ல, நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. incredible இந்தியா மாதிரி, incredible இளையராஜா என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களுக்கு காப்பிரைட் வேண்டாம் என கூறியுள்ளது பற்றி கேட்ட போது, இளையராஜா, "அனாவசியமான கேள்வி என்னிடம் கேட்கக் கூடாது" என கோபமாக தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மேலும் கடந்த வாரம் இளையராஜாவின் வீட்டிற்கே சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவரிடம் சிம்பொனி நோட்ஸ்களையும் இளையராஜா காண்பித்து மகிழ்ந்தார். அது போல் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications