இளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
சென்னை: இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் இசையின் அடையாள இளையராஜா என்று கூறலாம். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து இருக்கும் இளையராஜாவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விழா எடுக்க திட்டமிட்டு இருந்தது. ஐந்து முறை தேசிய விருது வாங்கிய இவரை கவுரவிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழா இசையராஜா-75 என்ற பெயரில் மிக பிரம்மாண்டமாக நடப்பதாக இருந்தது. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கான அழைப்பிதழ் கூட அடிக்கப்பட்டு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதை அடுத்து விழா நடப்பதாக இருந்த பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த விழா முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியுடன் நடக்கவில்லை. விஷால் தரப்பு யாருடனும் ஆலோசிக்காமல் இதை நடத்துகிறார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் வழக்கு
சென்னை ஹைகோர்ட்டில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஒரு வாரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

பதில்
சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஹைகோர்ட் சம்மன் அனுப்பியது. இதில், அனைத்து தரப்பிடமும் விவாதித்த பின்பே விழா நடத்துவதாக தயாரிப்பாளர் சங்கம் பதில் அளித்து இருந்தது.

என்ன தீர்ப்பு
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இளையராஜா- 75 பாராட்டு நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விருப்பப்படி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கண்டிப்பாக நடக்கும்
இதனால் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான தடை அகன்று இருக்கிறது. இந்த விழா இதனால் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சினிமா துறையினர் மட்டுமில்லாமல் மக்களும் அதிக அளவில் எதிர்பார்த்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications