சிறு கடைகள், தாபாக்களில் இல்லீகல் ‘மினி’ பார்கள்.. தமிழக அரசு ஸ்ட்ரிக்ட் வார்னிங்! இனி அவ்ளோதான்!
சென்னை: உரிமம் பெறாமல் உணவகங்கள், தாபா உள்ளிட்ட சிறு கடைகளில் மதுபானங்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உணவகங்கள் மற்றும் சாலையோர தாபா போன்ற சிறு கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அரசு அனுமதி இன்றி லைசென்ஸ் இல்லாமல் சிறு கடைகளில் சட்டவிரோத பார்கள் நடத்தி வருவது அரசின் கவனத்திற்குச் சென்றது.

இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறு கடைகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக 'மினி' பார் நடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யும் பொருட்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகிறது.
அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல் உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications