49 வயது கள்ளகாதலனுக்கு.. 19 வயசு மகளை.. பதற வைத்த யுவராணி.. கொந்தளித்த மஞ்சுளா.. தூக்கிய போலீஸ்!

19 வயது பெண்ணை திருமணம் செய்த 49 வயது நபர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 49 வயது கள்ளக்காதலனுக்கு தன்னுடைய 19 வயது பெற்ற மகளையே கல்யாணம் செய்து வைத்துள்ளார் மஞ்சுளா.. இந்த கொடுமை சென்னையில் நடந்துள்ளது!

பல்லாவரம் அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.. 49 வயதாகிறது.. அத்தை மகள் மஞ்சுளாவை கல்யாணம் செய்துள்ளார்.. இது ஒரு லவ் மேரேஜ்!

19 வயதுள்ள ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்... கண்ணன் கட்டிட தொழில் செய்பவர்.. அதனால் பல ஊர்களுக்கு சென்று இந்த கட்டிட தொழில்களை மேற்கொள்வார்.

16 வயது சிறுமி

16 வயது சிறுமி

அப்படி 2005-ல் அவருடைய சொந்த ஊரான வந்தவாசியில் உள்ள தென்னகரத்திற்கு கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது 16 வயது சிறுமியை கல்யாணம் செய்வதாக ஏமாற்றி வந்தவாசியில் இருந்து அழைத்து சென்றுள்ளார். மகளை காணவில்லை என்று வந்தவாசியில் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவும் இது சம்பந்தமான விசாரணை நடத்தியதில் கண்ணன்தான் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது உறுதியானது.. இதையடுத்து வந்தவாசி போலீசார் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

ஆனால் கண்ணனை காணோம்.. 3 மாதங்களாகியும் கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை.. பின்னர் பெங்களூரில் அவர் இருப்பதாக தெரியவரவும் போலீசார் அங்கு சென்று கண்ணனை அழைத்துகொண்டு வந்தனர்.. சிறுமியையும் மீட்டனர். ஆனால் சிறுமி வீட்டில் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.. மேலும் புகாரையும் திரும்ப பெற்றனர். இதையடுத்து சங்கர் நகர் போலீசார் கண்ணனுக்கு எச்சரித்தும் அறிவுரை சொல்லியும் அனுப்பி வைத்தனர்.

யுவராணி

யுவராணி

ஆனால் இதற்கு பிறகும் கண்ணன் அடங்கவில்லை.. 2018 -ல் ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலைக்கு சென்றபோது. யுவராணி என்ற பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது.. யுவராணிக்கு வயது 45.. இவரும் கட்டிட தொழிலாளிதான்.. இவர்களின் உறவு கண்ணனின் மனைவி மஞ்சுளாவுக்கு தெரியவந்தது... பலமுறை எச்சரித்தும் கண்ணன் திருந்தவில்லை.. அதனால் சங்கர் நகர் ஸ்டேஷனில் மஞ்சுளா கண்ணனை பற்றி புகார் தந்தார்.. போலீசாரும் கண்ணன் & யுவராணியை அழைத்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

மஞ்சுளா

மஞ்சுளா

ஒரு மாசம்தான் கண்ணன் ஒழுங்கா இருந்திருப்பார்.. திரும்பவும் யுவராணியுடன் காதல் தொடர்ந்தது.. யுவராணிக்கும் கண்ணனை விட்டுவிட மனசில்லை... மஞ்சுளா மறுபடியும் வந்து தங்கள் கள்ளக்காதலை பிரித்து விடுவாரோ என்று யுவராணி பயந்துவிட்டார்.. அதனால் தன்னுடைய 19 வயது மகளை கண்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் 2 மாசம் கழித்துதான் மஞ்சுளாவுக்கு தெரியவந்தது.. என்ன சொல்லியும் 2 பேரும் இப்படி அடங்கவில்லையே என்று ஆவேசமடைந்த மஞ்சுளா, தாம்பரம் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதற்கு பிறகு கண்ணன், யுவராணி, அவரது மகள் 3 பேரையும் போலீசார் வரவழைத்து இதை பற்றி விசாரித்தனர்.. அப்போதுதான் அந்த 19 வயது மகள் 8 மாத கர்ப்பிணி என்பது தெரிந்து போலீசாரே ஆடிப்போய்விட்டனர்.. மறுபடியும் போலீசார் கண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மஞ்சுளாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று அட்வைஸ் தந்து அனுப்பினர். ஆனால் கண்ணன் லீலைகளை தொடராமல் இருப்பாரா? மறுநாளே யுவராணியை தேடி சென்றுவிட்டார். அவ்வளவுதான்... வெறுத்தே போய்விட்டார் மஞ்சுளா.. இனி வீட்டுக்கு வந்தால் சேர்க்கவே கூடாது என்றும் முடிவு செய்தார்.

மிரட்டல்

மிரட்டல்

ஆனால் நடந்ததோ வேறு.. யுவராணியும், கண்ணனும் மஞ்சுளாவுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியும் உள்ளனர்.. இதனால் அளவுக்கு மனம் நொந்த மஞ்சுளா 10 தூக்கு மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார்.. மயங்கி கீழே விழுந்ததை பார்த்தும் வீட்டில் உள்ளோர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இப்போது திரும்பவும் சங்கர் நகர் போலீசில் புகார் கண்ணன் மீது புகார் தரப்பட்டது.. இந்த முறை புகாரை தந்தது கண்ணனின் மகன்.. பெற்ற தந்தையின் மீதே புகார் கொடுக்கவும் கண்ணன் மீது ஒருவழியாக வழக்கு பதிவு செய்தனர்.. இப்போது கண்ணன் புழலில் உள்ளார்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+