"விஜய் கையால் கார் வாங்க காத்திருக்கிறேன்" - மதுரை மாநாட்டில் சேதமடைந்த கார் உரிமையாளர் விளக்கம்
சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பத்தை நடும் போது சாய்ந்ததில் இன்னோவா கார் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து, புதிய கார் வாங்கித் தருவதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட தினேஷுக்கு புதிய கார் வாங்கி தரப்படவில்லை என்று தினேஷ் கூறியதாக சோஷில் மீடியாக்களில் பரவி வந்த நிலையில், நான் வேதனையடைந்திருப்பதாக செய்திகள் பரப்பப்படுவது உண்மையில்லை என தினேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக 100 அடி உயர கொடி கம்பம் நடும் பணிகள் நடைபெற்றன. மாநாட்டுக்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.

கொடிக்கம்பம் விழுந்து விபத்து
முதல் மாநாட்டை போல் இந்த 2ஆவது மாநாட்டின் முகப்பிலும் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு மாநாடு தொடங்கும் போது அதை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை நிறுத்த நிர்வாகிகள் முயன்றனர். அப்போது கிரேனின் பெல்ட் அறுந்து கொடிக் கம்பம் கீழே சாய்ந்ததில் கம்பம் இரண்டாக உடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிர்வாகியின் இன்னோவா கார் மீது விழுந்தது.
சுக்குநூறான இன்னோவா
இதில், இன்னோவா கார் சுக்குநூறாக நொறுங்கியது. ஆனால், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, உடனடியாக சேதமடைந்த கார், கொடிக் கம்பம் அகற்றப்பட்டு மாநாடும் நடைபெற்றது. இந்நிலையில் நிர்வாகிக்கு புதிய இன்னோவா கார் வாங்கித் தரப்படும் என விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கார் கொடுக்கவில்லையா...
மாநாடு முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் தவெக சார்பில் கார் வாங்கித் தரப்படவில்லை என்றும் இச்சம்பவம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கார் வாங்கி தரவில்லை என தினேஷ் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், இந்த தகவல் உண்மை இல்லை என்று பாதிக்கப்பட்ட தினேஷ் கூறியுள்ளார்.
விஜய் கையால் தான் வாங்குவேன்
அவர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மேலிடத்தில் பேசி என்னுடைய காரை என் விருப்பப்படி தயார் செய்திருக்கிறார்கள். விஜய் கையால் வண்டியை வாங்க வேண்டும் என்று குடும்பத்தோடு காத்திருக்கிறேன். இழந்த காரை விட நல்லகார்தான் எனக்கு கிடைக்கிறது. நான் வேதனையடைந்திருப்பதாக பரப்பப்படும் செய்திகள் உண்மையில்லை என்று தினேஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications