தீவிரமாகும் தென்மேற்கு பருவ மழை.. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுளள அறிவிப்பில். "தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குமரியில் அதிக மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 9 சென்டிமீட்டர் மழையும், கரூர் பரமத்தியில் 8 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தலா 6 செமீ மழையும், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் ஆகிய இடங்களில் 5 செமீ மழை பெய்துள்ளது.

அதி தீவிரமாகும்
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுவடைகிறது. அது நாளை பிற்பகல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஸ்வர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக் (ராய்ப்பூர்) அருகே கரையை கடக்கக்கூடும்.

கடலுக்கு போகாதீங்க
இதன் காரணமாக மன்னர் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறவாளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எங்கு மழை அதிகம்
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கரூர், கன்னியாகுமரி திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துள்ளது. அதேநேரம் திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர். விழுப்புரம், சென்னை, அரியலூர், கடலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம் பெரம்பலூர், புதுச்சேரியில் சுத்தமாக மழை பெய்யவில்லை" இவ்வாறு வானிலை மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications