நாளை 17 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. வானிலை மையம் வெளியிட்ட சூப்பர் தகவல்
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை மற்றும் வானிலை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்ப சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது,

மிதமான மழை
இதேபோல் நாளைய நிலவரப்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை
இதேபோல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்ப நிலை 36 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 26 டிகிரியாகவும் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வேலூரில் கன மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு0 4 செமீ, காட்பாடி (வேலூர்) 3 செமீ, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் 2 செமீ, வேலூர் 2செமீ, விரிஞ்சிபுரம் (வேலூர், பொண்ணை அணை (வேலூர்), அம்முடி (வேலூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), பரிலியார் (நீலகிரி) தலா ஒரு செமீ மழை பெய்துள்ளது.

கடலுக்கு செல்லக்கூடாது
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றம் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீடடர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீடடர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும். நாளை முதல் 30ம் தேதி வரை கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று 40-50 கிலோமீடடர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் கர்நாடகா கடலோரப்பகுதிகள். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் இன்று முதல் இம்மாத இறுதி வரை 40-50 கிலோமீடடர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications