திரும்பி வந்த வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. இந்திய வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    chennai rain update | சென்னையில் அடுத்த 2 மணி நேரம் முக்கியம்

    சென்னை: தஞ்சை, திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை

    கனமழை

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மிக அதிக மழை

    மிக அதிக மழை

    இந்த நிலையில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும்.

    மஞ்சள் அலர்ட்

    மஞ்சள் அலர்ட்

    இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது. தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    பற்றாக்குறை

    பற்றாக்குறை

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 649.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 64 சதவீதம் அதிகமாகும். அது போல் கோவையில் 378.1 மி.மீ., ராமநாதபுரத்தில் 520.5 மி.மீ, நெல்லை 464.8 மி.மீ, தூத்துக்குடி 393.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாகும். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பற்றாக்குறையாக உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+