அதி கனமழை வெளுக்க போகுது.. அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூருக்கு ”ரெட் அலர்ட்..” ஐஎம்டி
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு வட சென்னை மட்டும் திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை, கடலூர், நெல்லை, தென்காசி, திருச்சி, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை நிற்காமல் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழையும், திருவள்ளூரில் மீஞ்சூர் பகுதியில் கனமழையும் கொட்டி வருகிறது.

தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில் தற்போது இரவு 7 மணி வரைக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் அதனை ஒட்டிய வட சென்னை பகுதிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்து சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடி மின்னலுடன் இரவு 7 மணி வரை கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.
இதேபோன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல் இரவு 7 மணி வரை அரியலூர், கோவை, கடலூர், திண்டுக்கல், குமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications