தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் அதிக மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரை இருக்கும் என்பதால் இதனிடையே 2 அல்லது 3 குறைந்த காற்றழுத்தங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் , வங்கக் கடலில் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும். இதனால் நாளையும் (நவம்பர் 10) நாளை மறுநாளும் (நவம்பர் 11) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையின் அளவு
ஏற்கெனவே நாளை மட்டும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை மறுநாளும் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மழையின் அளவு குறையும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

நாளை மறுநாள்
தமிழகத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றால் வருவாய் பேரிடர் மீட்பு படையினரும் அரசும் உடனடியாக வெள்ளப் பாதிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அர்த்தமாகும். அது போல் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களையும் உடனடியாக கரை திரும்புமாறு கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பெய்த் மழை
ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பெய்த கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாக மாறியதை அடுத்து மேலும் மழை நீடிக்கும் என்பதாலும் அன்றைய தினம் சென்னைக்கு மட்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இத்துடன் தற்போது தமிழகத்திற்கே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications