வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அந்த 2 மாவட்டங்களில் கனமழை தொடரும்!
தெற்கு அந்தமான் அருகே வங்க கடலில் புதியதாக ஒரு காற்றழுத்தம் இன்று உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெர
சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால்
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய ஒட்டு மொத்த மழையும், இந்த 11 நாட்களில் கூடுதலாகவே பெய்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன.
பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தொடரும் கனமழை
வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலை சென்னைக்கும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கும் இடையே கரையைக் கடந்து, தற்போது ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டு அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்து சென்றாலும், தமிழகத்தின் சில இடங்களில் இன்னும் மழை நீடித்து வருகிறது.

இருளில் தவிப்பு
சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் இருந்தே வெயில் நிலவினாலும், சில இடங்களில் மழை பெய்தது. வெள்ளநீர் வடியாமல் உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவை திறக்கப்படவில்லை. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியவில்லை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கன்னியாகுமரியில் மழை தீவிரம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து திற்பரப்பு அருவியில் வெள்ள்ம பெருக்கெடுத்துள்ளது. அணைகள், நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கன மழை முதல் மிக கனழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சில தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். தண்டவாளங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

புதிய காற்றழுத்த தாழ்வு
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்குத் தடை
இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications