அ.இ.அண்ணா தி.மு.க வா! அ.இ.ஜின்னா தி.மு.க வா? எடப்பாடி பழனிசாமி மீது திடீரென பாய்ந்த அர்ஜூன் சம்பத்!
சென்னை: கோவை குண்டுவெடிப்பு இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாட்டை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி லோக்சபா தேர்தல் பிரசார காலம். அப்போது பாஜகவின் நிறுவனத் தலைவர் எல்.கே. அத்வானி பிரசாரத்துக்காக கோவை வரும் தருணத்தில் 18 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. மொத்தம் 58 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1993-ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைப் போல கோவையை உருக்குலைத்துப் போட்டது இந்த நாசகார சதி செயல்.

இந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கோவை பாஷா தலைமையிலான அல் உம்மா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என போலீசார் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. கோவை பாஷா உட்பட அந்த இயக்கத்தினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பல்லாண்டுகாலமாக சிறையில் இருந்தும் இவர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபை தேர்தலின் போது தற்போதைய ஆளும் திமுகவும் வாக்குறுதி அளித்திருந்தது.
அதேநேரத்தில் திமுக ஆட்சியில் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற அரசின் கோப்புக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை தாமதமாகி வருகிறது.
இதனிடையே தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை தொடர்பாக குரல் கொடுத்தார்; தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.
அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத், அ.இ.அண்ணா தி.மு.க வா! அ.இ.ஜின்னா தி.மு.க வா! குண்டு வைத்த இமாம்அலியை என்கவுண்டர் செய்தது ஜெயலலிதா அரசு! இந்து முன்னணி நாட்டுக்குத் தேவை என்றார் எம்ஜிஆர்! அதிமுக கொள்கைகளுக்கு துரோகம்! இஸ்லாமியஓட்டு வங்கிக்காக எடப்பாடியார் குண்டுவெடிப்பு கைதிகள்விடுதலை கோருவது தவறு!ஆபத்து என விமர்சித்துளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications