ஆசை ஆசையாக தானே, அண்டாவில் தயார் செய்து.. ஆதரவற்றோருக்கு பிரியாணி.. அசத்தும் இமான் அண்ணாச்சி
சென்னை: நடிகர் இமான் அண்ணாச்சி ஏழைகளுக்கு, தானே பிரியாணி சமைத்து, தானே சென்று வழங்கும் காட்சி வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. லாக்டவுன் நடைமுறையில் இருப்பதன் எதிரொலியாக ஏழை, எளியவர்கள், அன்றாட கூலி வேலை செய்வோர், வருமானம் இன்றி சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதால், இணைந்த கைகள் அறக்கட்டளையும், கலாம் அறக்கட்டளையும் இணைந்து தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தயாரானது.
இதற்காக நடிகர் இமான் அண்ணாச்சியும் இத்திட்டத்தில் இணைந்து, தானே பிரியாணி செய்து அதை பார்சலும் செய்து கோயம்பேடு மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் உள்ள சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்கள்.
இத்திட்டத்தில் நடிகர் சந்தோஷ் மற்றும் கலாம் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் அவர்களும் இணைந்து தினமும் மதிய உணவு கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது.

அதில் இமான் அண்ணாச்சி, பிரியாணியை, அண்டாவில் வைத்து கிளறும் காட்சிகளும், பிறகு அவற்றை, முதியோருக்கு வழங்கும் காட்சிகளும் உள்ளன. எல்லாம் ஓகே அண்ணாச்சி.. அப்படியே, கையுறையும், முக கவசமும் அணிந்து பிரியாணியை வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே. அடுத்த முறை இதை ஃபாலோ செய்வார் என நம்புவோம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications