சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக வெள்ள நிவாரண நிதி ரூ.6,230 கோடி உடனே தர வேண்டும்.. பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 2 மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை மழை புரட்டி போட்டது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.

மேலும், தென் மாவட்டம், கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டம் என அனைத்து பகுதிகளிலும் மழை கடுமையான சேதத்தை விளைவித்தது. வீடுகள் சேதம், பயிர் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு என சேதம் கடுமையாக உள்ளது.

immediately allocate Rs 6,230 crore for flood relief in Tamil Nadu TN CM m.k.stalin sent letter to PM modi

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.6,230 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.

பெருமழை, வெள்ளத்தால் தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. எனவே தமிழ்நாட்டுக்கு மழை பாதிப்பு நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

English summary
Chief Minister MK Stalin has written a letter to Prime Minister Modi asking him to immediately allocate Rs 6,230 crore for flood relief in Tamil Nadu. The northeast monsoon settled over Tamil Nadu for more than two months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X