சென்னையில் சொத்து வழிகாட்டி மதிப்பு 10 சதவீதம் உயர்ந்தது.. பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைக்குமா அரசு?
சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர்த்து, மற்ற பகுதிகளில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம், பதிவு கட்டணங்களை, 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிளம்பியிருக்கிறது.
தமிழ்நாடு முத்திரை விதிகள்படி, வருடந்தோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும்... இந்த வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்காகவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைவதற்காகவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக்குழு கடந்த ஏப்ரல் 26ம் தேதி கூடி வகுத்து அளித்தது.
அறிவுறுத்தல்: மைய மதிப்பீட்டுக் குழுவின் அறிவுறுத்தல்கள்படி, வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும், பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான நடைமுறைகளும் வகுக்கப்பட்டன.
பொதுமக்களிடமிருருந்து அறியப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, துணை குழுக்களால் வரைவு வழிகாட்டி மதிப்புக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அவகாசம்: பின்னர், வரைவு வழிகாட்டி மதிப்பு பொதுமக்கள் பார்வையிட வழிகாட்டி பதிவேடுகள், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பதிவுத்துறை இணையதளம், சார்பதிவாளர், வட்டாட்சியர், அலுவலகங்களில் வைக்கப்பட்டன. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட துணைக்குழு 3 வது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள், கருத்துக்களை பரிசீலித்து, முரண்பாடுகளை களைந்து, புதிய சந்தை வழிகாட்டி மதிப்பை அங்கீகரித்தது.
இது மைய மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு, கடந்த ஜூன் 29ம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் தவிர்த்து புதிய வழிகாட்டி மதிப்பு, நேற்று (ஜூலை 1) முதல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதுதான்:
வழிகாட்டி மதிப்பு: "தமிழ்நாடு முத்திரை விதிகள்படி, ஆண்டுதோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்காகவும், வழிகாட்டியில் உள்ளமுரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக்குழு கடந்த ஏப். 26-ம் தேதி கூடி வகுத்துஅளித்தது.
இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக் குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணை குழுக்கள் மே மாதம் முதல் வாரம் கூடி மைய மதிப்பீட்டுக் குழுவின் அறிவுறுத்தல்கள்படி, வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான நடைமுறைகளை வகுத்தளித்தது.
வழிகாட்டி மதிப்பு: பொதுமக்களிடமிருந்து அறியப்பட்ட சொத்துகளுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, துணை குழுக்களால் அதற்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரைவு வழிகாட்டி மதிப்பை பொதுமக்கள் பார்வையிட வழிகாட்டி பதிவேடுகள், பதிவுத்துறை இணையதளம், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டன. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது..
இதையடுத்து, மாவட்ட துணைக்குழு 3-வது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனை, கருத்துகளை பரிசீலித்து, முரண்பாடுகளை களைந்து, புதிய சந்தை வழிகாட்டி மதிப்பை அங்கீகரித்தது. இது மைய மதிப்பீட்டுக்கு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பதிவுத்துறை : பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு, கடந்த ஜூன் 29-ம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஜூலை 1 முதல் புதிய வழிகாட்டி மதிப்பு, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி நீங்கலாக தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை, பெரும்பாலான பகுதிகளில் இப்போதுள்ள வழிகாட்டி மதிப்பிலிருந்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது... குறிப்பாக சென்னையை பொறுத்தவரை, சென்னை அடையாறு சார்பதிவக எல்லைக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் ஒரு சதுரடிக்கு ரூ.14 ஆயிரம் என்றிருந்த மதிப்பு இப்போது ரூ.15,400 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை நிலம்: அண்ணாசாலை தெருவில் ரூ.9500 என்றிருந்த மதிப்பு இப்போது ரூ.10,500 ஆகவும், காந்தி மண்டபம் சாலையில் ரூ.10 ஆயிரம் என்றிருந்தது இப்போது ரூ.11 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, தேனாம்பேட்டை மண்டலத்தில் அண்ணாசாலையில் நந்தனம் முதல் ஜெமினி மேம்பாலம் வரையிலான பகுதிக்கு ரூ.19 ஆயிரம் என்பதும், அடையாறு கிளப் சாலையில் ரூ.23 ஆயிரம் என்பதும், அம்புஜம் தெருவில் ரூ.13ஆயிரம் என்பதும், அவ்வை சண்முகம் சாலையில் ரூ.12 ஆயிரம் என்ற மதிப்பிலும் மாற்றப்படவில்லையாம்.
பதிவு கட்டணம்: இதனிடையே, பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.. சந்தை நிலவரத்துக்கேற்ப நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, உரிய கால இடைவெளியில் மாற்றுவது அவசியம் என்றாலும், இவ்வாறு மதிப்புகளை திருத்தும் நடைமுறை, குழப்பம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
இப்போது 10 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட்டுள்ளதால், நிலங்களின் விலை உயரும்.. எனவே, வழிகாட்டி மதிப்புகளை உயர்த்தும் நிலையில், பதிவு கட்டணங்களை, 2 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைக்க வேண்டும், அப்போது தான் வீடு, மனை வாங்குவோர் கூடுதல் செலவை சமாளிக்க முடியும் என்றும் கோரிக்கைகள் வெடித்து வருகின்றன.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications