பத்திரம் பத்திரம்.. சொத்து, நில ஆவணங்கள், தங்க நகைகளை தீயில் இருந்து எந்தெந்த வழிகளில் காப்பாற்றலாம்
சென்னை: பத்திரங்கள், ஆவணங்கள், தங்க நகைகளை, வீடுகளில் வைத்திருக்கும்போது, அவைகளை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனினும், வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும்போது, அதிலிருந்து தங்க நகைகள், பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பாலமுருகன் ஆலோசனைகளை பொதுமக்களின் நன்மைக்காக தெரிவித்துள்ளார். அது என்ன?
உழைத்து, பாடுபட்டு வாங்கிய நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் உங்களுடையதுதான் என்பதை சட்டப்பூர்வமாக எடுத்துரைக்கும் ஆதாரம்தான் பத்திரங்கள்தான். எனவே, பத்திர ஆவணங்களை கவனத்துடன் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

சொத்து பத்திரங்கள் உங்களிடம் இருப்பதை போலவே, அரசு ஆவணங்களிலும் வைத்து பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நம்முடைய பெயரிலேயே அந்த ஆவணங்கள் இருக்கின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பத்திரங்கள் தவிர பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற இதர ஆவணங்களையும் பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
ஒரிஜினல் பத்திரங்கள்
வீட்டில் வைத்திருக்கும் ஒரிஜினல் பத்திரங்களை, வெறுமனே போட்டுவைக்காமல், ஒரு பாலித்தீன் கவரில் வைக்கலாம். ஆனால், பத்திரங்கள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு, ஒரிஜினல் பத்திரம், ஜெராக்ஸ் பத்திரம் இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஒரிஜினல் பத்திரங்களிலுள்ள சர்வே எண், பத்திரப்பதிவு எண்களை மட்டும், ஒரு பேப்பரில் தனியாக எழுதி வைத்து கொண்டால், அவசர தேவைக்கு உதவும். அல்லது நகல்களை மட்டும் கொண்டு செல்லலாம்.
ஒரிஜினல் பத்திரங்களை லேமினேஷன் செய்து வைக்கக்கூடாது.. இப்படி செய்தால் பத்திரங்களில் நம்பகத்தன்மை இருக்காது.. மேலும், பத்திரங்கள் கவருடன் ஒட்டிக்கொண்டு எழுத்துக்கள் அழியவும் வாய்ப்புள்ளது. அதேபோல, பத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்து வைக்க வேண்டும். பத்திரங்களுக்கு ரப்பர் பேண்ட், கிளிப்களை போடக்கூடாது. வெயில் நேரத்தில், பாலித்தீன் கவரிலுள்ள பத்திரங்களை பிரித்து, தனித்தனியாக காய வைத்து எடுத்து கொள்ளலாம்.
தங்க நகைகள் - ஆவணங்கள்
ஆனால், வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும்போது, அதிலிருந்து தங்க நகைகள், பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள பாலமுருகன், "வீடுகளில் பணம், நகைகள், பத்திரங்கள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக வைப்பவர்கள், அதற்கான தீ தடுப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்..
அடுக்குமாடி குடியிருப்பு - ஸ்பிரிங்லர்
அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் கட்டும்போது, அதில் உட்புற அளவில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, "ஸ்பிரிங்லர்" போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அறையிலும் இந்த கருவியையும், "ஸ்மோக் டிடெக்டர்" எனப்படும் புகை உணரும் கருவியையும் அமைப்பது அவசியம்.
தீப்பிடிக்காத தன்மையுடன், லாக்கர்கள் பல்வேறு அளவுகளில் வந்து விட்டன. பிரபல நிறுவனங்கள் தயாரிப்பில், 60,000 முதல், 5 லட்சம் ரூபாய் வரை பல்வேறு விலைகளில் இந்த லாக்கர்கள் கிடைக்கின்றன. மர அலமாரியில் விலை உயர்ந்த பொருட்களை வைக்காமல், இரும்பில் உருவாக்கப்பட்ட பீரோக்கள் மற்றும் லாக்கரில் வைக்கலாம்" என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications