முடிஞ்சிடுச்சோ?.. "நீர்வளம்" பற்றி திமுகவின் அடுத்த அறிவிப்பு.. முதல் நபராக பொங்கியது யார் தெரியுமா?
சென்னை: 12 மணி நேர வேலை மசோதாவுக்கான எதிர்ப்புகள் வலுத்துவரும்நிலையில், மற்றொரு விவகாரத்தையும் சூழலியல் ஆர்வலர்கள் கிளப்பி வருகின்றனர்.. இந்த அறிவிப்பு குறித்து, திமுக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

12 மணி நேர வேலை மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் பேரவையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்தன..
திமுக அரசு: தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக அரசு கடந்த 2020ம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே இந்த திருத்த சட்டம் அமைந்துள்ளதுதாக இக்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன..
இந்நிலையில், திமுக அறிவித்த மற்றொரு விஷயம் குறித்த அதிருப்தியும் அதிர்ச்சியும் கிளம்பி உள்ளது.. தமிழக சட்டசபையில், நீர்வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.. இதற்குதான் சூழலியல் ஆர்வலர்கள் கொந்தளித்து உள்ளனர்.. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவிட்டுள்ளது.

நில ஒருங்கிணைப்பு திட்டம்: அந்த பதிவில், "நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கும் வகையில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்களான) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] என்னும் புதிய சட்ட மசோதாவிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு சட்டபேரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஏக்கர் அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது இச்சட்ட மசோதா. இப்படி நீர்நிலைகளை பயன்படுத்திக்கொள்ள நிபுணர் குழு மூலம் நிலம் ஒருங்கிணைப்பு திட்டம் உருவாக்கப்படும் என்றும் மசோதா கூறுகிறது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் நீர்நிலைகளில் அமைக்க மட்டுமே ஏதுவாக இருக்கும்.
புவி வெப்பமாதல்: மேலும் நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. மேலும், வேளாண்மை, மேய்ச்சல் சார்ந்த செயல்பாடுகளும் பாதிப்புகுள்ளாகும். நிலப்பயன்பாடு மாற்றப்படுவது புவி வெப்பமாதலை அதிகரிக்கும் என்று ஐ.பி.சி.சி. ஆய்வறிக்கைகள் கூறுவதென கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உடனடியாக இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்" என்று அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications