10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்.. இன்று வெளியாகிறது .. தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
இன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 6ம் தேதி துவங்குகிறது.. அன்றைய தினம் தொடங்கி 20- 04 - 2023 வரை தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுக்கான அட்டவணை மற்றும் முடிவு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் இருந்தது.. அந்த அட்டவனை இதுதான்:

டைம்டேபிள்
| தேதி | பாடம் |
| 06.04.2023 | தமிழ் |
| 10.04.2023 | ஆங்கிலம் |
| 13.04.2023 | கணிதம் |
| 15.04.2023 | விருப்ப மொழிப் பாடம் |
| 17.04.2023 | அறிவியல் |
| 20.04.2023 | சமூக அறிவியல் |

சோஷியல் சயின்ஸ்
அதுமட்டுமல்ல, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது... ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், கணித பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளன.. இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது... எனவே, மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள்..

ஹால் டிக்கெட்
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், தனித்தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) நாளை வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அதில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.

மேஜர் தகவல்
இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20 முதல் 24- ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். தங்களுக்குரிய தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications