பாமாயிலை விடுங்க..ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி.. "இவங்க சாப்பிட கூடாது".. மத்திய அரசு மேஜர் உத்தரவு
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
உடலில் வைட்டமின் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்போது, தினசரி உணவில் செயற்கை சத்துகளை சேர்த்து தந்தால், மக்கள் பயன்பெற முடியும் என்று செயற்கை ஊட்டமேற்றிய உணவில் சமீபகாலமாக முனைப்புக் காட்டி வருகிறது இந்திய அரசு.
செறிவூட்டப்பட்ட அரிசி: இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ளவே மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டது.

இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசிதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அவை சேர்க்கப்படும் விதம் பல உள்ளன. அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு: இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியை பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இந்த அரிசியின் பைகளில் (+F) என்று எழுதப்பட்டிருக்கும். இத்துடன் Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும்.
அந்தவகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கி வருகிறது... மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழக ரேஷன் கடைகளில், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.
இரும்பு சத்து: எனினும், தானியங்களில் இரும்புச்சத்தை செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பைக் கணிசமாக அதிகரிக்க செய்யும் என்கிறார்கள்.. அது மட்டுமல்லாமல், ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தாது என்றும் ஆய்வுகள் சொல்கின்றனவாம்.. குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரிய தொற்று ஏற்படலாம், உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம் என்றெல்லாம் செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.
புதிய உத்தரவு: அதனால்தான், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் குறித்து மக்களிடையே அரசாங்கம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
வைட்டமின் பி12: அதாவது, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது, அரிசியை மாவாக அரைத்து, இரும்புச்சத்து, 'போலிக் அமிலம், வைட்டமின் பி 12' போன்ற சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.. பிறகு, அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோவுக்கு, 1 கிலோ என்ற விகிதத்தில் புழுங்கல், பச்சரிசியுடன் கலந்து வழங்கப்படுகிறது..
சாக்கு பைகள்: எனவே, இந்த அரிசியை, 'தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது' என்ற விழிப்புணர்வு வாசகத்தை, அந்த அரிசி உள்ள சாக்கு பையில் அச்சிடுமாறு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, இந்திய உணவு கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications