வருமான வரித்துறை மாஸ்.. யாருமே தப்ப முடியாது.. வளையத்துக்குள் "புள்ளி".. நம்பரை பார்த்தீங்களா? சபாஷ்
சென்னை: லோக் சபா தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.. அந்தவகையில், வருமான வரித்துறையும் முக்கிய அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எம்பி தேர்தலை நடத்துவதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை சமீபகாலமாகவே மேற்கொண்டு வந்த நிலையில், மற்றொருபக்கம், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வந்தது. முக்கியமாக, ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் கள நிலவரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தெல்லாம் தீவிரமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில் தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்துவிதமான பணிகளும், முன்னேற்பாடுகளும் முடிந்தநிலையில், தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஆணையர்: அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், வருகிற ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முதலே தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.
இதையடுத்து, பல இடங்களில் அரசியல் கட்சிகள் படங்கள், போஸ்டர்கள், பேனர்கள், உடனடியாக அகற்றும் பணிகள் ஆரம்பமாகின.. அத்துடன் தலைவர்களின் உருவச்சிலைகளை துணிகளால் மறைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.
முக்கிய அறிவிப்பு: நேற்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர், ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் சொல்வதற்காகவே, பிரத்யேகமான போன் நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
பண பலம், ஆள் பலம், விதிமீறல் போன்றவைகள் எல்லாம் தேர்தல் ஆணையம் முன் உள்ள சவால்களாக உள்ள நிலையில், 1905 என்ற எண்ணில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் ராஜீவ்குமார் அறிவித்திருந்தார்..
தொலைபேசி எண்: இந்நிலையில், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வருமான வரித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது:
"நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
புகார்கள்: எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைபேசி எண் / மின்னஞ்சல்/ புலனம் (whatsapp) மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தகவலை பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
கட்டணம் இல்லா தொலைபேசி எண் - 1800 425 6669
மின்னஞ்சல் : [email protected]
வாட்ஸ்ஆப் - 94453 94453
- இவ்வாறு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சூரியன் மறைந்தபிறகு, பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறை ஒவ்வொரு தேர்தலின்போதும் அறிவிக்கப்படும். அதுபோலவே இப்போதும் தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சபாஷ்: எனினும், பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றில் விதிமீறல்கள், மாலை 6 மணிக்கு மேல் அதிகமாகவே நடக்க வாய்ப்பிருக்கிறது..
அதனால்தான், புகார் சொல்வதற்காகவே, இந்த பிரத்யேக போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது.. கட்டுப்பாட்டு அறைக்கு மக்கள் தெரிவிக்கும் புகார்கள், உடனுக்குடன் பறக்கும் என்று தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, கட்டுப்பாட்டு அறையும், இந்த புகார் எண்ணும் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையும் அதிரடியை கிளப்பி வருகறிது.












Click it and Unblock the Notifications