பான் கார்டு டூ சம்பளம்.. கிரெடிட் கார்டு வேணுமா? பான் எண் செயலிழந்துட்டால் இந்த 10 விஷயமும் மாறிடும்
சென்னை: ஒருவரது பான் நம்பர் செயலிழந்துவிட்டால், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன தெரியுமா? சம்பந்தப்பட்டவருக்கு பாதிக்கப்படக்கூடிய 10 வகையான பரிவர்த்தனை பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் அனைவருக்குமே மிகவும் முக்கியமான ஆவணம் பான் கார்டுகள்.. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடந்தோறும், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும்.

அவசியம்: அந்தவகையில், ஆண்டுதோறும், இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
அப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம் தேவைப்படும்.. அனைத்து நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், இந்த பான் கார்டுகள் தேவை. 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும். வங்கிக்கணக்கை ஒருவர் துவங்க வேண்டுமானாலும் பான் கார்டுகள் அவசியம்..
கட்டாயமாகும்: பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமானாலும் பான் கார்டுகள் அவசியம்.. டிமேட் கணக்குக்கும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கார்டுகளை பெற வேண்டுமானாலும் இந்த பான் கார்டுகள் கட்டாயமாகும்.
இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த பான் கார்டுகளை எப்போதுமே பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். பான் எண்கள் செயலிழந்து விடாமலும் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை பான் எண் செயல்படாமல் போய்விட்டால், அவரால் சில பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. என்னென்ன தெரியுமா?
- FD மற்றும் சாதாரண சேமிப்பு கணக்கு தவிர வேறு எந்த கணக்கையும் தொடங்க முடியாது. அதேபோல, டெபாசிட்டரி அல்லது செக்யூரிட்டிகளிலும் டீமேட் கணக்குகளையும் ஆரம்பிக்க முடியாது.
- மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டை வாங்க விரும்பினால், ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனைகள் இருக்காது.. 50000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், எங்கியுமே நிறுவனத்தின் பத்திரம் அல்லது கடன் பத்திரங்களை வாங்க முடியாது.
- இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரத்தையும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது. எந்த வங்கியிலும், ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. கூட்டுறவு வங்கியிலும்கூட டெபாசிட் செய்ய முடியாது.
- ஓட்டல் உட்பட பல்வேறு இடங்களில், ஒரே நேரத்தில் உங்களால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பில் கட்ட முடியாது
- வெளிநாடு சென்றால், வெளிநாட்டு பணத்திலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பில் செலுத்த முடியாது
- கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் விண்ணப்பிக்க முடியாது.
- டிராப்ட் மற்றும் செக்குகளுக்கு வங்கியால் ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக செலுத்த முடியாது... அதேபோல, வங்கி FD-க்கு ஒரே நேரத்தில் 50000 மேல் முதலீடு செய்ய முடியாது.
- ஒரு வருடத்தில் எந்த வங்கியிலும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வது, NBFC, கூட்டுறவு வங்கி உட்பட எங்குமே செய்ய முடியாது.
- ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வடிவில் கூட 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது... எந்த வகையான பத்திரங்களையும் விற்பதற்கும் ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது.
- பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications