பயணிகள் கவனத்திற்கு.. 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை பாதியளவு ரத்து.. எந்தெந்த ரூட்?
சென்னை: ரயில் பயணிகளின் கவனத்துக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ரயில்களின் சேவை பாதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடப்பதால் பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்களின் சேவை பாதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர் - வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் (வண்டி எண்- 16844) பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் 10, 13 ஆம் தேதிகளில் கரூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மேலும் பணிகள் முடிந்த பிறகு அந்த ரயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் ரயில் (வண்டி எண்-16811) எக்ஸ்பிரஸ் 10, 13 ஆகிய தேதிகளில் வீரராக்கியம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16812) 10, 13 ஆகிய தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும். அந்த ரயில் சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை இயக்கப்படும். எனவே, ரயில் சேவைகளின் பாதிப்புக்கு பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications