ரவுண்டு வாங்க.. அங்கேயே இருந்தா எப்படி? ஸ்டாலின் போட்ட உத்தரவு.. ரெடியான அமைச்சர்கள்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்கள் சிலருக்கு முக்கியமான உத்தரவு ஒன்று முதல்வர் அலுவலகம் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களுக்கும் மேல் இருக்கிறது.
ஆனால் தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் தயாராக தொடங்கிவிட்டன. தேர்தல் வெற்றிபெறுவது தொடர்பான வியூகங்களை வகுக்க மாநில கட்சிகள் பல தயாராகிவிட்டன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம்..திருச்சியில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..பயன்கள்

திமுக
இந்த தேர்தலில் பிரம்மாண்ட கூட்டணி அமைப்போம் என்று அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இந்த கூட்டணி அமைப்பதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டு வருகிறாராம். பல்வேறு சிறிய இயக்கங்கள், கட்சிகள், சில சாதி ரீதியிலான கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறாராம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பாஜக தனது பூத் கமிட்டியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. பூத் வாரியாக பாஜக வலிமை இன்றி காணப்படுகிறது.

பூத்
இதனால் பூத் வாரியாக புதிதாக நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணியில் பாஜக இறங்கி உள்ளது. இப்படி ஒவ்வொரு கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் இறங்கி உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்கள் சிலருக்கு முக்கியமான உத்தரவு ஒன்று முதல்வர் அலுவலகம் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.அதன்படி தமிழ்நாட்டில் சில அமைச்சர்கள் சென்னையில்தான் இருக்கிறார். மா. சுப்பிரமணியம்., சேகர் பாபு போன்றவர்கள் சென்னையில்தான் உள்ளனர். இன்னும் சிலர் தென் மாவட்டங்களில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சென்னை வந்து செல்கிறார்கள்.

சென்னை அலுவலகம்
எல்லா அமைச்சர்களுக்கும் சென்னையில் அலுவலகம் உள்ளது. தலைமை செயலகத்தில் அலுவலகம் உள்ளது. இதில் ஒரு சில அமைச்சர்கள்தான் பெரும்பாலும் சென்னைக்கு வருவது இல்லை என்று கூறப்படுகிறது. தங்கள் தொகுதியிலேயே இவர்கள் இருக்கிறார்கள். அங்கு இருந்தபடியே அமைச்சரவை பணிகளை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் தவறு எதுவும் கிடையாது. இருந்தாலும் அமைச்சர்கள் அடிக்கடி அமைச்சரவை அலுவலகம் வர வேண்டும். சென்னையில் முடிந்த அளவு அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு சென்று இருக்கிறதாம்.

நிர்வாகம்
நிர்வாக ரீதியான பணிகளை செய்ய, துறை ரீதியான அதிகாரிகளை கண்காணிக்க அமைச்சர்கள் சென்னைக்கு வர வேண்டும். தொகுதியில் இருந்தே படியே பணிகளை செய்தால், துறை ரீதியான அதிகாரிகளை கவனிக்க முடியாது. அதேபோல் சென்னையில்தான் துறை ரீதியாக பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்கள் நடக்கின்றன. இதில் சில அமைச்சர்கள் கலந்து கொள்வது இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் தொகுதியிலேயே இருந்து விடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி சென்னை வர வேண்டும். மாதத்தில் பாதி நாட்களை சென்னையில் செலவு செய்ய வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு சென்று இருக்கிறதாம்.

தவறு இல்லை
தொகுதியில் அமைச்சர்கள் இருப்பது தவறு இல்லை. அதற்குத்தான் தொகுதி மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். ஆனால் அமைச்சர்கள் என்பவர்கள் தொகுதிக்கு மட்டுமின்றி மாநிலம் முழுமைக்கும் அமைச்சர்கள். அதனால் அவர்கள் மற்ற மாவட்டங்களிலும் தேவைப்படுவார்கள். அதனால்தான் ஒரு சில அமைச்சர்களை எல்லா மாவட்டங்களுக்கும் ரவுண்டு செல்லுங்கள். சென்னையில் அதிக நாட்கள் இருங்கள் என்று உத்தரவு சென்றுள்ளதாம். இதனால் சென்னை பக்கம் தென்படாத சில அமைச்சர்களை இனி அடிக்கடி சென்னையில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.