சென்னை வெள்ள நிவாரணம் ரூ. 6000.. ரேஷன் கடைக்கு வாங்க போறீங்களா? முதல்ல இதை நோட் பண்ணுங்க!
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கியமான சில அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார்.

வெள்ள பாதிப்பு: மிக்ஜாம் புயல் நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000/- பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
படிவம் வழங்கப்படும்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 10.00 மணிக்கு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும்.. மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் 17.12.2023 முதல், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் தகவல்: அதேபோல் சென்னையில் வசித்து, சென்னையில் குடும்ப அட்டை இல்லாதவர்களும் இந்த நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.6000 வெள்ள நிவாரண நிதி பெற குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டோக்கன் கிடைக்கப் பெற்றவர்கள், குறிப்பிட்ட தேதி, நேரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் ரூ.6000 வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய அறிவுரை: மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கியமான சில அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரணம் தொடர்பாக அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை செய்துள்ளார். அந்த ஆலோசனையில்... ரேஷன் கடைகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நேரடியாக ரேஷன் கடைகளில் சென்று மக்கள் பணம் வாங்க வேண்டும் என்பதால் அங்கே மக்கள் வசதியாக நிற்க சாமியானா பந்தல் போடப்பட வேண்டும்.
கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்க்கவே.. டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி கூட்டம் அதிகமாக வரும் என்பதால்.. பேரிகேட் போடப்பட உள்ளது. அங்கேயே குழப்பங்களை தீர்க்க கூடுதலாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம் உங்கள் குழப்பங்களை கேட்க முடியும். அந்த அதிகாரி எப்போதும் ரேஷன் கடையில் இருக்க வேண்டும்.
டோக்கனை வழங்கியதும் அதை சரி பார்த்து உடனே பணம் கொடுப்பார்கள். ரேஷன் கார்டுடன் ஒப்பிட்டு உடனே பணம் கொடுப்பார்கள். இந்த பணிகள் முறையாக நடக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications