குரூப் 4 தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அக்., 28ல் டிஎன்பிஎஸ்சி முக்கிய ஆலோசனை! ரிசல்ட் எப்போ வரும்?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. 6244 பணியிடங்களுக்காக தேர்வு நடைபெற்ற நிலையில், சுமார் 2600 கூடுதல் காலிப் பணியிடங்களை இணைத்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது.
அவற்றில் சுமார் 6244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வானது ஜூன் மாதம் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. ஜூன் மாதம் 8ஆம் தேதி ஒன்பதரை மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது.
மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுத் தாள்களை திருத்தும் பணியானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதி இருக்கும் நிலையில் மிக அதிக போட்டி இருக்கும். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் மொத்தமுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6744 ஆக உயர்ந்தது. பின்னர் 2,208 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 8,932 இடங்களாக அதிகரித்தது.
இந்த நிலையில் தேர்வர்கள் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சு நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications