பான் கார்டு யூஸ் பண்றீங்களா? இதென்ன பிரான் கார்டு? பான் அட்டை போல இருக்கே வாவ்.. இதை தெரிஞ்சுக்குங்க
சென்னை: பான் கார்டுகளின் அவசியம், பயன்கள் என்னென்ன தெரியுமா? இந்த பான் கார்டுகளில் தரப்பட்டுள்ள 10 இலக்க எண்களுக்கான அர்த்தம் என்ன தெரியுமா?
இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமான ஆவணமாகிவிட்டது பான் கார்டுகள்.. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடந்தோறும், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.. அதாவது, வருடத்துக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம் தேவைப்படும்.

பரிவர்த்தனைகள்: அனைத்து நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு இந்த பான் கார்டுகள் தேவை. 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும்.
வங்கிக்கணக்கை ஒருவர் துவங்க வேண்டுமானாலும், இந்த பான் கார்டுகள் தேவை. பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், டிமேட் கணக்குக்கு இந்த பான் கார்டுகள் தேவை. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கார்டுகளை பெற வேண்டுமானாலும், பான் கார்டுகள் தேவை.. பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்க முடியாது.
விண்ணப்பம்: உங்கள் பான் கார்டுகள் தொலைந்துவிட்டால், ஆன்லைனிலேயே அதை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
- https://www.tin-nsdl.com/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, 'Reprint of PAN Card' இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும், அதில் உங்கள் பான் கார்டு தகவலை நிரப்ப வேண்டும்.
- உங்கள் பான் கார்டில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி-ஐ அதில் பதிவிட்டு, "Submit" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், டிடி அல்லது காசோலை மூலம் இந்த பணத்தை நீங்கள் செலுத்தலாம்...
- பணம் செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.. நகல் பான் கார்டுகள் 15 முதல் 20 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.. உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு நகல் பான் கார்டுகள் அனுப்பப்பட்டுவிடும்.
பிரான் கார்டுகள்: பான் கார்டுகள் போலவே பிரான் கார்டுகள் உள்ளன. அதென்ன ப்ரான் கார்டுகள் (PRAN)? இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா? அனைத்து வகையான வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கு பான் எண் கட்டாயம் என்றால், அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கு PRAN எண்களும் கட்டாயமாகும்.
என்பிஎஸ் (NPS) என்ற தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், ஓய்வூதிய பணப்பலன்களுக்கு உரிமை கோர வேண்டுமானால், இந்த PRAN எண்கள்தான் தேவைப்படும்.
(PAN, PRAN ) பான், பிரான் என்று உச்சரிப்புகள் ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டும் வேறு வேறானவை.. பார்ப்பதற்கும் இரண்டுமே ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டுமே வேறு வேறானவை.. தனிநபர்களின் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு இரண்டுமே தேவையானவை என்றாலும், ஒன்று வருமான வரித்துறையுடன் தொடர்புடையதென்றால், இன்னொன்று ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது.
பயன்கள்: பான் கார்டுகளில் 10 இலக்கங்களை கொண்ட நம்பர்கள் இருக்கும்.. பிரான் கார்டுகளில் 12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான நம்பர்கள் இருக்கும்.
பிரான் கார்டுகளின் கீழ் மக்கள் 2 வகையான NPS கணக்குகளை வைத்துள்ளனர்... இந்த பிரான் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் NSDL என்ற இணையதளத்தில் செய்யப்படுகிறது. இதற்கு உங்களுடைய KYC ஆவணங்கள், போட்டோக்கள் கட்டாயம் தேவைப்படும். ஆன்லைன் + ஆஃப்லைன் என இரு வகைகளிலும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications