சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மேட்டர்கள்.. எதுவும் பேசாமல்.. சைலன்ட் ஆன எடப்பாடி.. ஏன் என்னதான் ஆச்சு? "அவரும்" அமைதியாகிட்டாரே!

Google Oneindia Tamil News

சென்னை: உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக தொடர்ந்து மௌனம் காத்துகொண்டு இருக்கிறது.

உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பாட் ஆகியோர் இதை எதிர்த்து உள்ளனர். இதனால் 3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

விக்டர் நாம கெத்துதான? 'முக்கிய பதவி’.. டெல்லியில் பலம் பெறுகிறாரா எடப்பாடி? பாஜகவின் அதிரடி மூவ்! விக்டர் நாம கெத்துதான? 'முக்கிய பதவி’.. டெல்லியில் பலம் பெறுகிறாரா எடப்பாடி? பாஜகவின் அதிரடி மூவ்!

திமுக

திமுக

இந்த விவகாரத்தில் உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வழக்கில் திமுக தீவிரமாக சட்ட போராட்டம் நடத்தி வந்தது. திமுக சார்பாக எம்பி வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தீவிர வாதம் நடத்தி வந்தார். நாடாளுமன்றத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராகவே திமுக எம்பிக்கள் வாக்களித்தனர். அதேபோல் நேற்று முதல்வர் ஸ்டாலினும் இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதில், . சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு.

அறிக்கை

அறிக்கை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

கூட்டம்

கூட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக இந்த விவகாரத்தில் நிலைப்பாடு எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இதில் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக தொடர்ந்து மௌனம் காத்துகொண்டு இருக்கிறது. முன்னதாக நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் அதிமுக ஆதரவும் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக வெளிநடப்பு செய்தது.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில்தான் வழக்கு விவகாரத்திலும் அதிமுக நிலைப்பாடு எதுவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. அதிமுக தலைவர்கள் யாரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பாஜக இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளது. இதில் திமுக தவறான தகவல்களை பரப்புவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

அதிமுக

அதிமுக

சிறிய சிறிய கட்சிகள் கூட இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து உள்ளன. ஆனால் அதிமுக சார்பாக யாரும் இதில் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அதிமுக இந்த விவகாரத்தில் மட்டுமின்றி சமீப நாட்களாக முக்கியமாக பல விஷயங்களில் மௌனம் காத்து வருகிறது. செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் ஜெயக்குமாரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முக்கியமான 5 விஷயங்களில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி கோவை கார் வெடிப்பு பற்றி பெரிதாக பேசவில்லை

கோவை

கோவை

கோவையில் 9 அதிமுக எம்எல்ஏக்கள் இருந்தும் இதில் அதிமுக மௌனம் காத்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை பற்றி அவர் பேசவில்லை. குரு பூஜைக்கு ராமநாதபுரம் செல்லவில்லை. சென்னை வெள்ளத்தின் போது சென்னையை பார்வையிட எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை பற்றி பேசவில்லை. இப்படி முக்கியமான விஷயங்களில் எல்லாமே எடப்பாடி தீவிரமாக மௌனம் காத்து வருகிறார். எடப்பாடி ஏன் இப்படி சைலன்ட் மோடில் இருக்கிறார் என்று தெரியாமல் அவரது தீவிர ஆதரவாளர்களும் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

English summary
In 5 significant issues including EWS, Edappadi Palanisamy and AIADMK kept themselves so silent .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X